இவ் வருடத்தின் கடந்த 9 மாதங்களில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 401 மில்லியன் ரூபாய்களை சேமிக்க முடிந்துள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
தேவையற்ற செலவுகளை தவிர்த்தமையே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2014ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அலுவலகத்தின் மொத்த செலவு 2180 மில்லியன் ரூபாய் எனவும் இவ்வருடத்தின் அதே காலப் பகுதியின் மொத்த செலவு 1779 மில்லியன் ரூபாய் மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.