செவ்வாய் கிரகத்தில் மணல் குன்று….!

 

செவ்வாய் கிரகத்தில் மணல் குன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் செவ்வாய் கிரகத்தை கண்காணிக்க ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது.

sand-dunes-on-mars

அதில் பொருத்தப்பட்டுள்ள அதி சக்திவாய்ந்த கமரா செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை துல்லியமாக படம் பிடித்து அனுப்பி வருகிறது.

சமீபத்தில் எடுத்து அனுப்பப்பட்ட புகைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு நொறுங்கிய நிலையில் மணல் குன்றுகளுடன் காணப்படுகிறது.

உடைந்த படிவங்கள் காற்றில் பறந்து மணல் குன்றுகளாக மாறி இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.