விண்வெளியில் பல விண்கற்கள் மிதக்கின்றன அவற்றில் பெரும்பாலானவை பூமியை நோக்கி பாய்ந்து வரும் போது எரிந்து சாம்பலாகின்றன. சில கற்கள் பல துண்டுகளாக உடைந்து பூமியின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், தற்போது பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மிகப்பெரிய இராட்சத விண்கல் ஒன்று தற்போது பூமியை நெருங்கி வருகிறது. அதற்கு 86666 (2000 எப்.எல்.10) என பெயரிடப்பட்டுள்ளது.
அந்த விண்கல் சுமார் 2.6 கி.மீட்டர் அகலம் கொண்டது. அதை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ‘நாசா’ மையம் கண்டுபிடித்தது.
அது ‘அப்பலோ 1862’ என்ற இராட்சத விண்கல் போன்று இருந்தது. அக்கல் பூமியின் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
அதே போன்று இந்த விண்கல்லும் பூமியில் மோதினால் கடும் விளைவுகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஓசோன் மண்டலம் முற்றிலும் அழிவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன் அதன் மூலம் பருவ நிலையில் மாறுதல்கள் உருவாகும் எனவும் கூறப்படுகின்றது.
குறைந்தது 91 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும். அதனால் உலகமே அழியும் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அதே நேரத்தில் மணிக்கு 63,374 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து வரும் இந்த விண்கல் விரைவில் பூமியை தாக்காமல் கடந்து செல்லாம் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.