எம்.முசாஹித்
அல் – குர்ஆன் அத்தியாயம் 55 வசனம் 9 இன் தலைப்பில் ஐக்கிய ராச்சியத்தில் மாநாடு
وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ
‘SLIF-UK இன் 12 ஆவது வருடாந்த மாநாடு, சனிக்கிழமை, ஒக்டோபர் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை Luton, uk இல் உள்ள ‘Venue 360′ என்ற அரங்கத்தில் நடை பெற இருக்கின்றது’, என்று அதன் ஏற்பாட்டாளர்கள் சார்பில் சகோதரர் மிஸ்காத் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்; ‘அல்குரான் 55:9 இல் இறைவன் குறிப்பிடுகின்ற நீதியைக்கொண்டு நடுநிலைமையை நிலை நாட்டுங்கங்கள். நடுநிலைமையில் இருந்து வரம்பு மீறாதீர்கள், என்பதை தலைப்பாக கொண்டு இந்த மாநாடு நடைபெற உள்ளது’.
ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, பிள்ளைகள் என அனைத்து தரப்பினரும் பயன் பெரும் வகையில் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், ஹலாலான வகையில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விசேடமாக இளைஞர்களுக்கான, யுவதிகளுக்கான மாநாடுகள் தனித் தனியாக நடைபெறு ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகில் தலைசிறந்த கல்வி மான்கள் இங்கு உரையாற்ற உள்ளார்கள். Mjm. மன்சூர், அட்னான் ராஷிட், அஜ்மல் மஸ்ரூர், பாரூக் முராத், யூசுப் mufthi, Dr. Deen போன்றவர்கள் இதில் குறிப்பிடத்தக்க பேச்சாளர்கள் ஆவர் என்றும் மிஸ்காத் குறிப்பட்டார்.
உங்கள் அனைவரையும், குடும்ப சகிதம் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்குமாறு slif-உக சார்பாக அழைப்பு விடுப்பதாக மிஸ்காத் மேலும் தெரிவித்தார்.