உயிரைப் பறித்த செல்பி !

இன்றைக்கு ‘செல்பி’ ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடையே அது ஒரு ‘டிஜிடல் புற்று நோய்’ போல விரைந்து பரவுகிறது.

Russia-2

சமூக வலைத்தளங்களில் கண் சிமிட்டும் தனது செல்பிகளுக்குக் கிடைக்கும் ‘லைக்’குகளும், பார்வைகளும் இளம் வயதினரை செல்பி எனும் புதை குழிக்குள் தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கின்றன.

 

ரஷ்யாவை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன் செல்பி மோகத்தால் 9 ஆவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளான்.

Russia-4

ரஷ்யாவின் வோலக்டா நகரில் 9 ஆவது மாடியில் இருந்து தொங்குவதை செல்பி படம் எடுக்க தன்னுடை நண்பருடன் சேர்ந்து முயன்று உள்ளார். குறைவான வெளிச்சம் இருந்ததால் கயிறு அவிழ்ந்து விழுந்தது. இதில் மாணவன் படுகாயம் அடைந்தார்.

Russia-5

உடனடியாக அருகில் உள்ல மருத்துவமனையில் சேர்க்கபட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

 

இது குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.

 

ரஷ்யாவில் இந்த ஆண்டு மட்டும் செல்பி எடுக்க முயற்சித்த 12 பேர் பலியாகி உள்ளனர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ரஷ்ய அரசு செல்பி எடுப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

Russia-6