சீனாவில் தொடர் குண்டு வெடிப்பு : 7 பேர் பலி !

சீனாவின் குவாங்சி மாகாணம் லியுசூ நகரில் பல்வேறு இடங்களில் இன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பால், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் முழுவதும் கட்டிட இடிபாடுகளாகவும், புகைமூட்டமாகவும் காட்சி அளித்தன. 

guanxi-blast-a_3

இந்த சம்பவத்தில், 7 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், ஒருவர் அங்கிருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளதால் பலி என்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. 

gx-blast-bldg-h

இந்த குண்டு வெடிப்பு, தீவிரவாதிகளின் வேலை அல்ல என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பார்சல் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக வெய் என்ற 33 வயது உள்ளூர் வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆஸ்பத்திரிகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ஜெயில்கள் என பல இடங்களுக்கு அவர் வெடிகுண்டுகளை பார்சல்களாக அனுப்பி குண்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

gx-blast-f gx-blast-view-01