காணி சுவீகரிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் : ஐ.நாவில் சுரேஸ் பிரேமச்சந்திரன் !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

suresh1

இலங்கையில் யுத்தம் 6 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் இனப்பிரச்சினை தற்போதும் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.

 

இந்த இனப்பிரச்சினைக்கான மூல காரணி கண்டறியப்பட்டு களையப்படுவது மிக முக்கியமானது என தனது உரையின்போது வலியுறுத்திய சுரேஸ் பிரேமச்சந்திரன், அதன் மூலமே நேர்மை மற்றும் நம்பகத்தன்மையுடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

மேலும், வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றி, சுவீகரிக்கப்பட்ட காணிகளை தமிழ் மக்களுக்கு மீட்டுக் கொடுப்பதிலும் சிங்களக்குடியேற்றங்கள் நிறுத்தப்படல் தொடர்பிலும் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.