அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் தனியார் ஊடகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் உறுப்புரை நீக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் தலையீட்டுடன் அந்த உறுப்புரை நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அதற்காக ஜனாதிபதிக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.