ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு மாகாணமான கடலோனியாயில் மொத்தமாக 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடு ஆக செயல்பட விருப்பம் தெரிவித்து வந்தனர்.
இதனால் அங்கு பல கட்டப் போராட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அங்கு வாழும் மக்களிடம் கருத்துக் கணிப்பு நேற்று நடத்தப்பட்டது.
அந்த கருத்துக்கணிப்பில், ஸ்பெயினிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக அதிகளவான வாக்குகள் கிடைக்கபபெற்றுள்ளன. அதை தொடர்ந்து கருத்துக் கணிப்பில் பிரிவினைவாதிகள் வெற்றி பெற்றதாக அப்பகுதி ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள அர்தர்மாஸ் கூறியுள்ளார்.
மேலும் 2017 ஆம் ஆண்டு முதல் கடலோனியா பகுதி சுதந்திர நாடாக பிரகனடம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் ஸ்பெயின் இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஐரோப்பா கண்டத்தில் கடலோனியா என்ற புதிய நாடு உருவாகிறது. இது ஸ்பெயினின் வளம் மிகுந்த பகுதி.
தொழிற்சாலைகளும, வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள பார்சிலோனாவில் ஸ்பெயினின் 2 ஆவது பெரிய விமான நிலையம் உள்ளது. அங்கு காணப்படும் துறைமுகம் 3 ஆவது பெரிய துறைமுகமாகும்.