ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் நேற்று அமெரிக்காவினால் இலங்கை தொடர்பான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.
இந்த யோசனையை வரவேற்பதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா நேற்றைய தினம் முன்வைத்த தனது யோசனையை வரவேற்கின்றோம் என குறிப்பிட்டுள்ளது.
பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழுவினரால் விசாரணைகளை முன்னெடுக்க அமெரிக்கா முன்வைத்துள்ள யோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளமையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் யோசனைப்படி இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கும், சர்வதேசத் தரப்பினருக்கும் தமது ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.