பிறந்து 3 நாட்களில் கடத்தப்பட்ட குழந்தை 17 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு

தென்ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனை சேர்ந்த  செலஸ்ட்-மோர்னே நர்ஸ் தம்பதியினருக்கு  அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 1997 இல் பிறந்த பெண் குழந்தை கடத்தப்பட்டு 17 ஆண்டுகளுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளது.

பிறந்து 3 நாட்களில் குழந்தை கடத்தப்பட்டுள்ளது, பல இடங்களில் தேடியும் அக்குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் லெஸ்ட்-மேர்னே நர்ஸ் தம்பதிக்கு மேலும் 3 குழந்தைகள் பிறந்தன. இருப்பினும் காணாமல் போன ஷெபானியின் பிறந்த நாளை அந்த தம்பதிகள் கொண்டாடி வந்தனர்.

இதற்கிடையே ஷெபானி படிக்கும் பள்ளியில் இவர்களது இளைய மகள் காசிடி நர்ஸ் படித்து வந்துள்ளார். அவர்களது இருவரின் முக சாயலும் அச்சு அசல் ஒன்றாகவே இருந்தது.
அதை பார்த்த மற்ற மாணவிகள் அதுகுறித்து ஆச்சரியமாக பேசினர். இது குறித்து விசாரித்த போது, ஷெபானி கடத்தப்பட்டு பல இடங்களில் வேறு பல பெண்களால் வளர்ந்து வந்தமை தெரிய வந்தது.

அதை தொடர்ந்து 17 வருடத்துக்கு பிறகு செலஸ்ட் தம்பதியினர் ஷெபானியை மீட்டனர். டி.என்.ஏ. சோதனை நடத்தியதில் அவள் இவர்களது குழந்தை என உறுதி செய்யப்பட்டுள்ளது.