ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நியமனத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கம்பூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ குனசேகரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக எமது அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் உட்பட 44 பேரின் பெயர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டிருப்பதானது சட்டவிரோத செயல் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அது மக்கள் ஆணைக்கு எதிரானது என்பதுடன் அந்த நியமனங்களை செல்லுபடியற்றதாக்குமாறு டியூ குனசேகர தெரிவித்துள்ளார்.