வெப்பமான காலநிலையில் ஐஸ்கிறீமை நீண்ட காலம் உறைநிலையில் வைத்திருப்பதற்கான வழியை தாம் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஐஸ்கிறீம் மிகவும் மெதுவாக உருக உதவுவதுடன், அதற்கு மிகவும் மென்மையான, மிருதுவான தன்மையை கொடுக்கவும் கூடிய ”இயற்கையாகவே உருவாகும்” ஒரு புரதத்தை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்தக் கண்டுபிடிப்பு மோசமான கொழுப்பை குறைவாகவும், குறைந்த கலோரியுடனானதுமான உணவுகளை தயாரிக்கவும் உதவும் என்று எடின்பரோ மற்றும் டண்டி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இன்னும் மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் இந்த புதிய ஐஸ்கிறீம் விற்பனைக்கு வரலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.