சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்!

 

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையின் அரசியல் சட்டத்துக்குள்பட்ட வகையில் உள்நாட்டிலேயே விசாரணைகள் நடத்தப்படும். அது இலங்கையில் உள்ள அனைத்துச் சமூகங்களும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
Ranil
தி ஹிந்துவுக்கு அவர் அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

ரோம் நகரில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டில் இலங்கை கையெழுத்திடாததால் உள்நாட்டு விசாரணையே போதும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாங்கள் அந்த விசாரணை உள்நாட்டளவில் தான் நடக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறினோம். 

நீதித் துறை மீது நம்பிக்கை இழந்த சிலர்தான் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் மேற்கத்திய நாடுகளுடனான உறவைச் சீரமைப்பதுடன் இந்தியா மற்றும் சீனவுடனான உறவையும் பராமரிப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.