சாரணர் இயக்கத்தின் 50 வது விழாக் கொண்டாட்டமும் 5 நாற்களுக்கான கேம்ப் பயிற்சிகளும் !

அஸ்ரப் ஏ சமத்
கொழும்பு மாவட்டத்தில் உள்ள 98 பாடசாலைகளின்  சாரணா் இயக்கத்தின் 50 வது விழாக் கொண்டாட்டமும்   5 நாற்களுக்கான கேம்ப் பயிற்சிகளும்  தெஹிவளை கவுடான வீதியில் உள்ள சஸ்த்திரான்டா  மகா வித்தியாலயத்தில் நடைபெறுகின்றன. 
 இந் நிகழ்வு 26-30ஆம் திகதி வைர நடைபெற்று வருகின்றது. இதில் கொழும்பு மாவட்டத்தில்  உள்ள பாடசாலை மாணவ மாணவிகள் 2000க்கும் அதிகமானோா் கலந்து கொள்கின்றனா்.
ஆரம்ப வைத்தின்போது பிரதம அதிதியாக கொழும்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பிணரும் முன்னாள்  பிரதி கல்வியமைச்சருமான மோகன் லால் கெயிரு கலந்து கொண்டாா். 
இங்கு 5 நாட்கள் வதிவிடப் பயிற்சிகள், தலைமைத்துவம், சுயபயிற்சி, ஜக்கியம், பொருமை, சுயமாக கற்றல் உருவாக்குதல், ஒழுக்கம்,பிறருக்கு உதவுதல்,  கண்டுபிடித்தல், தலைமைத்துவத்துகு கட்டுப்படுதல், தமது தேவைகளை தாமே மேற்கொள்ளுதல்,  ஆலோசனை பெருதல்,  இயற்களை வளங்களைக்   கொண்டு தமது தேவைகளை அமைத்துக் கொள்ளல் விளையாட்டு, முகாமைத்துவம், சுகாதாரம், உடற்பயிற்சி,  போன்ற விடயங்கள் இக் கல்லுாாியின் பிரதேசத்தில் இருந்து தத்தமது கேம்புகளில் இருந்து கற்றுக் கொள்கின்றனா்.
இந் நிகழ்வில் கொழும்பு மாவட்ட சாரணா் தலைவா் சந்தன லெக்குகே  மாவட்ட ஆணையாளா் .-சுரேன் விக்கிரமதிலக்க ஆகியோறும் கலந்து கொண்டனா்.
2-samath 4 samath samath