அமைச்சுக்கள் பகிர்வு தொடர்பான இறுதிப்பட்டியல் தயார் !

 

அமைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை பகிர்ந்து­கொள்­வது தொடர்பில் ஐக்­கிய தேசி யக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் முழு­மை­யான இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டு­விட்­டது.

 

அந்த வகையில் பாரா­ளு­மன் றம் கூடிய பின்னர் புதிய அர­சாங்கத்தின் அமைச்­ச­ரவை பத­வி­யேற்­ப­தற்கு தீர்­மா­னமும் எடுக்­கப்­பட்­டது என்று நீதி அமைச்­சரும் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜயதாஸ ­ரா­ஜ­பக்ஷ தெரி­வித்தார்.

அமைச்­ச­ர­வையின் அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை 30 இற்கு மேல் அதி­க­ரிக்க வேண்­டு­மாயின் பாரா­ளு­மன்­றத்தின் அனு­ம­தியைப் பெற­வேண்­டி­யுள்­ளது. அந்தத் தேவைக்­கா­கவே தற்­போது அமைச்­ச­ரவை பத­வி­யேற்­பது தாம­த­மா­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து அமைக்­க­வுள்ள தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை பத­வி­யேற்பு தொடர்ந்து தாம­த­ம­டைந்து செல்­வது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

Unknown

நீதி அமைச்சர் விஜய தாஸ­ரா­ஜ­பக்ஷ இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,

பாரா­ளு­மன்றத் தேர்தல் முடி­வ­டைந்­துள்­ள­தை­ய­டுத்து ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்கம் அமைப்­ப­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. அந்த வகையில் தற்­போது தேசிய அர­சாங்கம் அமைப்­ப­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­களும் முடி­வ­டைந்து விட்­டன.

விசே­ட­மாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் தேசிய அர­சாங்­கத்தின் அமைச்சுப் பத­வி­களை பகிரும் விட­யத்­திலும் இரண்டு தரப்­புக்­கு­மி­டையில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. இதில் தற்­போது எந்­தப்­பி­ரச்­சி­னையும் இல்லை. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் எவ்­வாறு அமைச்­சுக்கள் பகிர்­வது தொடர்­பான இறு­திப்­பட்­டியல் தயா­ரா­கி­விட்­டது. இது தொடர்பில் இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் முழு­மை­யான இணக்­கப்­பாடும் எட்­டப்­பட்­டுள்­ளது.

தற்­போது அமைச்­ச­ரவை பத­வி­யேற்பு தம­த­ம­டை­வ­தற்கு காரணம் உள்­ளது. அதா­வது அமைச்­ச­ர­வையின் அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை 30 இற்கு மேல் அதி­க­ரிக்க வேண்­டு­மாயின் பாரா­ளு­மன்­றத்தின் அனு­ம­தியைப் பெற­வேண்­டி­யுள்­ளது. அந்தத் தேவைக்­கா­கவே தற்­போது அமைச்­ச­ரவை பத­வி­யேற்­பது தாம­த­மா­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது.

அந்த வகையில் எதிர்­வரும் முதலாம் திகதி பாரா­ளு­மன்றம் முதல்­த­ட­வை­யாக கூட­வுள்­ளது.அந்த முத­லா­வது கூட்டத் தொடரில் அமைச்­ச­ரவை அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­பது தொடர்­பான யோச­னையை நிறை­வேற்­று­வ­தற்கு நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம்.

அதன்­படி முதலாம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் யோசனை நிறை­வேற்­றப்­பட்­டதும் இரண்டாம் திகதி அமைச்­ச­ரவை பத­வி­யேற்­ப­தற்கே தற்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
எனினும் இரண்டாம் திக­தி­யிலும் பத­வி­யேற்­பதில் சிக்கல் இருப்­ப­தாக கூறப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யாயின் அதற்குப் பின்னர் ஒரு தினத்தில் அமைச்­ச­ரவை பத­வி­யேற்கும்.

எவ்வாறெனினும் எமது எதிர்பார்ப்பு 2 ஆம் திகதி பதவியேற்பதாகும். எனினும் நிலைமையைப் பொறுத்து தீர்மானம் எடுக்கப்படும். நான் இங்கு கூறிய விடயமே அமைச்சரவை பதவியேற்புக்கு காரணமாகும். 

அதனைவிடுத்து தேசிய அரசாங்கத்தில்அமைச்சரவையைபகிர்ந்து கொள்ளும்விடயத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் சுதந்திரக்கட்சிக்குமிடையில் எந்தப்பிரச்சினையும் இல்லை.