புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்களை இருண்ட யுகத்தினுள் தள்ளும் பாயிஸ் !

bais , faiz
அபூ பத்ரி
புத்தள மாவட்ட முஸ்லிம்கள் கடந்த 26 வருடங்களாக இழந்து போயிருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் இன்று ரிசாத் பதியுதீன் எனும் மன்னாரைச் சேர்ந்தவரால் மீளவும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பது புத்தளம் மாவட்ட முஸ்லிம்களை பெரும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் மட்டுமன்றி நாடுபூராகவும் உள்ள முஸ்லிம்களும் ஏன் – 33 ஆயிரம் வாக்குகளை பலத்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரிசாத் பதியுதீனுக்காக வழங்கிய அம்பாறை மாவட்ட முஸ்லிம்களும் புத்தளம் மண்ணுக்கான தேசியப்பட்டியலில் நியாயத்தை உணர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகமே  புத்தளம் மண்ணுக்கான தேசியப்பட்டியலை அகமகிழ்வோடு வரவேற்கும் இத்தருணத்தில் புத்தளத்தின் மக்கள் செல்வாக்கை இழந்து நிற்கும் அரசியல் வாதியான பாயிஸ் மட்டும் அழுக்காறு கொள்வது புத்தளம் மக்களை பிழையாக வழிநடத்தும் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகி;ன்றது.
‘ புத்தளம் மாவட்டத்தில் ரிசாத் பதியுதீனின் கொட்டத்தை அடக்க வேண்டுமாயின் நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைய வேண்டும் என்றும் ரிசாத் பதியுதீனின் ஆக்கிரமிப்பை தடுக்க முகாவில் இணைவதே ஒரே வழி’ என்றும் புத்தளத்தின் முன்னாள் நகர பிதாவும் முன்னாள் பிரதியமைச்சருமான கே.ஏ.பாயிஸ் இன்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பாயிஸின் மேற்படியான அறிக்கை புத்தளம் மாவட்ட முஸ்லிம்களையும் புத்தளத்தில் அகதியாக வாழும் வடபுல முஸ்லிம்களையும் மோதவிட்டு அதன் மூலம் அரசியல் குளிர் காயும் நோக்கம் கொண்டதாகவே புத்தளம் மாவட்ட முஸ்லிம்களால் இன்று நோக்கப்படுகின்றது.
புத்தளம் மாவட்ட முஸ்லி;களின் ராஜா நான்தான் என தன்னைத் தானே  நீண்ட வருடங்களாக கூறிக் கொண்டு வரும் பாயிஸ் இன்னும் அந்த மமதையிலிருந்து விடுபடவில்லை என்பதையே அவரின் அறிக்கை சுட்டிக்காட்டிநிற்கின்றது.
மையத்து வீடாக இருந்தால் நான் தான் மையத்தாக இருக்க வேண்டும். திருமண வீடென்றால் நான் தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்ற பாயிஸின் இறுமாப்புத் தனம் நிற்பதற்கே வழி இல்லையாம் அவருக்கு 09 பொண்டாட்டிகள் கேட்கின்றதாம் என்பது போல் உள்ளது.
புத்தளத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநித்துவம் இன்று கிடைத்துள்ளது என்றால் அதற்கு ரிசாதின் பெரும் தன்மையை வாழ்த்தி பாராட்டாமல் வீராப்பு அறிக்கை விடுவது புத்தளம் மாவட்ட மக்களை  இன்னும் முட்டாளாக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.
இந்த முஸ்லிம் பிரதிநித்துவத்தை நவவிக்கு வழங்காது பாயிஸூக்கு ரிசாத்பதியுதீன் வழங்கியிருந்தால் பாயிஸின் இன்றைய அறிக்கை ரிசாத் பதியுதீனை புகழ்ந்ததாகவே அமைந்திருக்கும்.
ஆக மொத்தத்தில் பாயிஸின் இந்த அறிக்கையானது நவவிக்கு கிடைத்தன் பொறாமைத்தனத்தின் உச்சக்கட்டமாகவே புத்தளம் மக்களால் பார்க்கப்படுகின்றது.
பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாகத் திகழ்ந்த முஸ்லிம் காங்கிரஸ் நடந்து முடிந்த தேர்தலோடு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருபகுதி முஸ்லிம்களின் ஆதரவைப்பெற்ற கட்சியாக பாரிய சுருக்கத்தை கண்டுள்ளது.
இவ்வாறான ஒரு கட்சியில் பாயிஸைப் போன்றவர்கள் இருக்கின்றமையாலும் பாயிஸ் மீண்டும் அக்கட்சியில் இணைவதாலுமே இவ்வாறான சுருக்கத்தை அந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று அடைந்து வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் வாதியின் அஸ்தமனத்தில் பாயிஸூக்கு நிறையத் தொடர்பு உண்டு என்ற சந்தேகப்பார்வை இன்று கூட அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியிலும் நாடு பூராகவுள்ள முஸ்லிம்கள் மத்தியிலும் நிலவுவதை பாயிஸ் மறந்திருக்க நியாயமில்லை.
இவ்வாறான ஒரு கட்டத்தில் பாயிஸை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இணைத்துக் கொள்வாராயின் அந்த சம்மாந்துறை அரசியல் வாதியின் அஸ்தமனத்தில் முகா தலைவர் ஹக்கீமுக்கும் பாரிய பங்குண்டு என்ற சந்தேகம் மறுபக்கம் முஸ்லிம்கள் மத்தியில்; எழுவதை யாராலும் தடுக்கவே முடியாது.
அவ்வாறான ஒரு முட்டாள் தனமான இணைப்பை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் செய்வதற்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லை. என்பது அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பாயிஸின் அறிக்கைக்கு பின்னரான நிலைப்பாடாக உள்ளது.
அதுமட்டுமன்றி ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் சந்திரிக்கா அரசைவிட்டு வெளியேறிய போது அற்ப சொற்ப பதவி ஆசைக்காக ஹக்கீமால் வழங்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநித்துவத்தையும் பிரதியமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டு சந்திரிக்கா அரசுடன் ஒட்டிக்கொண்டு பாயிஸ் இழைத்த துரோகத் தனத்தையும் ஹக்கீம் மறந்துவிடக் கூடாது
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ரிசாத் பதியுதீன் தனக்கு பாரிய சவாலாக அமைந்து விட்டார் 
என்பதற்காக மிகப்பெரும் துரோகத்தனத்தை சம்மாந்துறை முஸ்லிம்களுக்கோ அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கோ பாயிஸை இணைப்பதன் மூலம் ரவூப் ஹக்கீம்; செய்துவிடக் கூடாது என்பதே அம்மக்களின் கருத்தாக உள்ளது.
பிஸ்டூளை தூக்கிக் காட்டி அராஜகம் புரிந்த அந்தக் காலம் மலையேறி விட்டது என்பதை பாயிஸ் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
 புத்தளம் மாவட்டத்திற்கு ரிசாத் பதியுதீனால் கிடைக்கப்பெற்ற நவவி என்னும் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை பாயிஸ் ஏற்படுத்திக் கொண்டு – பாயிஸிக்கு கடந்த  காலங்களில்  ரிசாத் பதியுதீன் செய்த – பாயிஸால் காலத்தால் மறக்க முடியாத அந்த உதவிக்கு ரிசாத் பதியுதீனுக்கு உதவி ஒத்தாசை புரியாவிட்டாலும் அவர் ஆற்றும் நற்பணிகளை தடுக்காமல் இருப்பதே பாயிஸ் ரிசாதுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.
ரிசாத்பதியுதீனுக்கு எதிராக அபாண்டங்களை சுமத்துவதை விடுத்து தவ்பா செய்து வாழ பாயிஸூக்கு புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் ஒன்று பட்டு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
புத்தளம் மாவட்டத்தில் அ.இ.ம.கா சார்பாக போட்டியிட்ட நவவிக்கு சுமார் 32 ஆயிரம் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது என்றால் அந்த 32 ஆயிரம் பேரும் ரிசாத் பதியுதீனை தலைவராக ஏற்றுக்கொண்டு தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பது அதன் அர்ததமாகும்.
அந்த நம்பிக்கைக்கு பாத்திரமான ரிசாத் பதியுதீன் எமக்கு பிரதியுபகாரமாக வழங்கிய நன்றிக் கடனுக்கு அவரை வாழ்த்தி அவரை பலப்படுத்துவதன் ஊடாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் சமுகம் இன்னும் பல அதிகாரமிக்க அந்தஸ்துக்களையும் அபிவிருத்திகளையும் ஈட்டிக்கொள்ள வழிபிறக்கும் என்பதில் ஐயமில்லை.
புத்தளம் மாவட்டத்திற்கான நவவி எனும் பாராளுமன்ற உறுப்புரிமை ஊடான ரிசாத் பதியுதீனின் நன்றிக்கடனுக்கு புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் என்றும் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் வழங்குவார்கள்.
பாயிஸின் இவ்வாறான அறிக்கைகளை நம்பிச் செய்ற்படுவதற்கு புத்தளம் முஸ்லிம்கள் இனியும் தயாரில்லை.