- 12,400 – டெஸ்ட் அரங்கில் சங்கக்காரவினால் மொத்தமாக குவிக்கப்பட்ட ஓட்டங்கள். அத்துடன் இடது கை துடுப்பாட்ட வீரர் ஒருவரினால் குவிக்கப்பட்டுள்ள அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும். மேலும் ஐந்தாவது மொத்த ஓட்ட எண்ணிக்கையும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- 20 ஜீலை 2000 ஆம் ஆண்டு சங்கா டெஸ்ட் அரங்கில் அறிமுகமான பின்னர் அவரது ஓட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிகளவு ஓட்டங்களைக் குவித்துள்ளவர் சச்சின் மாத்திரமே.
- 11,679 – மூன்றாவது வீரராக களமிறங்கிய போது சங்காவினால் குவிக்கப்பட்டுள்ள மொத்த ஓட்ட எண்ணிக்கை. இதுவே டெஸ்ட் அரங்கில் மூன்றாவது வீரராக களமிறங்கி குவிக்கப்ட்டுள்ள அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். இவருக்கு அடுத்ததாக ட்ராவிட் 10,524 ஓட்டங்களை மூன்றாவது வீரராக களமிறங்கி குவித்துள்ளார்.
- 57.40 – கடந்த 40 வருடங்களில் டெஸ்ட் வீரரால் பெறப்பட்டுள்ள அதிகூடிய சராசரி இதுவாகும்.
- 38 – இடதுகை துடுப்பாட்ட வீரர் பெற்றுள்ள அதிகூடிய சதங்களுக்கான சாதனையும் சங்கா வசமே உள்ளது. அதிகூடிய சதங்கள் பெற்றுள்ளவர்கள் வரிசையில் சங்கக்கார நான்காவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- 6,554 – சங்கா மற்றும் ஜயவர்த்தன ஆகியோருக்கிடையிலான இணைப்பாட்ட ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 120 இனிங்ஸில் இந்த சாதனை புரியப்பட்டுள்ளதுடன், எந்தவொரு விக்கெட்டுக்குமான் இணைப்பாட்ட சாதனையான 624 ஓட்டங்கள் இவர்கள் இருவரினாலும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- 8 – சங்கக்கார 8 முறைகள் 500 நிமிடங்களுக்கும் அதிகமாக மைதானத்தில் துடுப்பெடுத்தாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த துடுப்பாட்ட வீரராலும் இந்த சாதனை முறையடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்ராவிட், கவாஸ்கர் மற்றும் மஹேல ஆகியோர் 7 முறைகள் 500 நிமிடங்களுக்கும் அதிகமாக துடுப்பெடுத்தாடியுள்ளனர். அத்துடன் இலங்கை வீரர் ஒருவரால் இனிங்ஸில் பெறப்பட்ட மொத்த ஆறு ஓட்டங்கள் 8 ஆகும். இது சங்காவினால் பங்களாதேஷ் அணிக்கெதிராக பெறப்பட்டது.
- ஆறு ஓட்டங்களுடன் 300 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரர் சங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
- 1438 – 2014 ஆம் ஆண்டில் சங்கக்காரவினால் பெறப்பட்ட ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
- 11 – பிரட்மனுக்கு அடுத்ததாக டெஸ்ட் அரங்கில் பெறப்பட்டுள்ள இரட்டைச் சதங்களின் எண்ணிக்கை.
- 230 – குமார் சங்கக்காரவின் கன்னி இரட்டைச்சத ஓட்ட எண்ணிக்கையாகும். இதுவே விக்கெட் காப்பாளர் ஒருவரால் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
- 69.60 – அணித்தலைவராக குமார் சங்கக்காரவின் சராசரியாகும். அது மூன்றாவது அதிகூடிய சராசரியாகும்.
சாதனைகள்
– 2012 இல் விஸ்டன் சஞ்சிகையின் சிறந்த கிரிக்கெட் வீரர்
– 2012 ஆம் ஆண்டின் ஐ.சி.சி இன் சிறந்த வீரர்
– 2012 ஆம் ஆண்டின் ஐ.சி.சி இன் சிறந்த டெஸ்ட் வீரர்
– மிக இள வயதில் MCC Spirit of Cricket Cowdrey இல் விரிவுரை நிகழ்த்தியவர்
– டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 8000, 9000, 10,000, 11,000 மற்றும் 12,000 ஓட்டங்களைக் கடந்தவர்.