தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளமாட்டேன் : நாமல் !

Namal Rajapaksa
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் விரும்பியதனைத் தெரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தாப்பம் வழங்கியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் இணைந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு விரும்பாதவர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தமக்கு இரண்டு சந்தர்ப்பங்களை வழங்கியதாக, ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நமால்  ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

 தாம் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.