இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று வருகின்றது.
இந்தப் போட்டியே இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார கலந்துகொள்ளும் இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
எனவே இரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய அவர் 18 ஓட்டங்களுடன் அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வௌியேறி ஏமாற்றமளித்துள்ளார்.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அபாரமாக ஆடிய அந்த அணி முதல் இன்னிங்சில் 393 ஓட்டங்களைக் குவித்தது.
பின்னர் தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை 306 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதனையடுத்து ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை இடைநிறுத்தியது.
இலங்கை அணி 413 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது.