இலங்கை அணியின் சங்கக்கார, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் கிளார்க் மற்றும் அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகிய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டி அவர்களின் இறுதிப் போட்டியாக அமையவுள்ளது.
சங்கக்கார நாளை கொழும்பு பி.சாரா மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியாவிற்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டிக்குப்பின் ஓய்வு பெறுகிறார். உலக்கிண்ணப் போட்டிக்குப்பின் ஓய்வு பெற இருந்த அவரை இலங்கை கிரிக்கெட் சபை பாகிஸ்தான்இ இந்தியாவிற்கு எதிரான தொடரில் விளையாடும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தலா இரண்டு போட்டிகளில் விளையாட ஒப்புக்கொண்டார்.
சங்கா 133 டெஸ்ட் போட்டிக ளில் விளையாடி 38 சதங்களுடன் 12350 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 11 இரட்டை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 319 ஓட்டங்களைக் குவித்துள்ளார். 404 ஒருநாள் போட்டிகளில் 25 சதங்களுடன் 14234 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
அதேநேரம் ஆஸி. அணியின் தலைவராக இருப்பவர் கிளார்க். தற்போது அந்த அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் அவுஸ்திரேலியா மோசமாக விளையாடி தொடரை 1–-3 என இழந்து பின்தங்கியுள்ளது. இதில் தலைவர் கிளார்க்கின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. 8 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் 4ஆ-வது டெஸ்ட் முடிவில் தனது ஓய்வு அறிப்பை வெளியிட்டார். அப்போது 20ஆம் -திகதி நடைபெற இருக்கும் ஓவல் போட்டிதான் தன்னுடைய கடைசி போட்டி என்றார்.
38 வயதாகும் கிறிஸ் ரோஜர்ஸ் ஆஸி. அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் பயிற்சியின்போது பந்து மார்பில் தாக்கியதால் மனதளவில் பாதிப்புகுள்ளாகக்கூடாது என்று எண்ணி அந்த தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதன்பின் ஆஷஸ் தொடரு டன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். அதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.