மாவட்ட ரீதியான ஆய்வு !

LION 3

நாடு முழுவதும் 12,314 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெற்றது.

வட மாகாணத்தின் வன்னி தேர்தல் மாவட்டத்தின் மூன்று நிர்வாக மாவட்டங்களில் வாக்களிப்பு நடைபெற்றது. வன்னித் தேர்தல் மாவட்டத்திலிருந்து 6 உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவுள்ளனர்.

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் மொத்தமாக 253,058 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். மன்னார் மாவட்டத்திலிருந்து 79,433 பேர் வாக்களிப்பதற்குத்  தகுதி பெற்றிருந்தனர்.

வவுனியா மாவட்டத்திலிருந்து 109,705 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 63,920 பேரும் இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 529,239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். யாழ். நிர்வாக மாவட்டத்தில் 450,146 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருந்ததுடன், 11 தொகுதிகளில் வாக்களிப்பு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 79,093 பேர் இம்முறை வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

மூன்று தேர்தல் மாவட்டங்களைக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்திலிருந்து 256,852 பேர் இம்முறை வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்ததுடன், மூன்று தொகுதிகளில் வாக்களிப்பு நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்திலிருந்து 4 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், 365,167 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு, கல்குடா மற்றும் பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளில் மக்கள் வாக்களித்தனர்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலிருந்து 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 465,757 பேர் வாக்களிப்பதற்கு தகதி பெற்றிருந்தனர். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளில் வாக்களிப்பு நடைபெற்றது.

மத்திய மாகாணத்தின் கண்டி தேர்தல் மாவட்டத்திலிருந்து 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1,049,160 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

கண்டி மாவட்டத்தின் 13 தேர்தல் தொகுதிகளில் மக்கள் வாக்களித்தனர். மாத்தளை மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளில் 379,675 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். மாத்தளை மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதேவேளை, நுவரெலியா மாவட்டத்திலிருந்து 8 உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

534,150 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தததுடன், நான்கு தேர்தல் தொகுதிகளில் வாக்களிப்பு நடைபெற்றது.

ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொனராகலை தேர்தல் மாவட்டங்களில் வாக்களிப்பு நடைபெற்றது. பதுளை மாவட்டத்திலிருந்து 8 உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்காக 620,486 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். பதுளை மாவட்டத்தின் 9 தேர்தல் தொகுதிகளில் வாக்களிப்பு நடைபெற்றது.

மொனராகலை மாவட்டத்தின் பிபில, வெல்லவாய மற்றும் மொனராகலை ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிப்பு நடைபெற்றது. மொனராகலை மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துரை ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்குவதுடன், இங்கு 47 மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வடமேல் மாகாணத்தில் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கும். இங்கிருந்து 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடங்கும். இன்று அமைதியான முறையில் இங்கு வாக்குப் பதிவு இடம்பெற்றதுடன், அந்த இரண்டு மாவட்டங்களிலிருந்தும் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர்.

தென் மாகாணத்தில் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து 25 பேர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் ​சேர்ந்த மக்கள் இன்று காலை முதல் வாக்களிப்பில் ஈடுபட்டதுடன், அந்த மாவட்டங்களிலிருந்து 20 பேர் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளனர்.

ஊவா மாகாணத்தில் பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்குகின்ற நிலையில், அந்த மாவட்டங்களிலிருந்து 13 பேர் பாராளுமன்ற பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.