எஸ்.அஷ்ரப்கான்
அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுத் தேர்தலில் முதல் தடவையாக இம்முறை களம் இறங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்த நாள் முதல் எமது மக்கள் இக்கட்சியின் பால் காட்டிய ஆர்வம் உட்சாகம் பிரமிக்கத்தக்கது. (அல்-ஹம்துலில்லாஹ்)
கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வேட்பாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள், மத்திய குழுவினர் மற்றும் ஆதரவாளர்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இரவு பகலாக உழைத்திருக்கின்றனர். அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் நல்லெண்ணத்தின் ஊடான உழைப்புகளுக்கு இறைவன் நற்கூலி கொடுப்பானாக.
இத்தேர்தலில் கட்சிக்கு இன்ஷா அல்லாஹ் மிகச் சிறப்பான முடிவை எதிர்பார்க்கின்றோம். நமது எண்ணத்தை எல்லாம் வல்ல இறைவன் கபூல் செய்வானாக !
அதேபோன்று புத்தளம், குருநாகல், அநுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக முதற் தடவையாக களமிறங்கினோம். அங்கும் இக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பேரார்வத்துடன் உழைத்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு அவர்களின் உழைப்புக்களையும் வல்ல இறைவன் ஏற்றுக் கொள்வானாக !
அதேபோன்று எமது கட்சியின் அடிப்படைத் தளங்களான வன்னி மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய மாவட்டங்களிலும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் அயராத உழைப்பும், உட்சாகமும் எமது கட்சியின் அடிப்படைத் தளங்கள் என பெருமையடிக்கும் கட்சிக்காரர்களால் உடைக்க முடியாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றது. எனவே அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.
இத்தேர்தலில் இன்ஷா அல்லாஹ் தேசியப்பட்டியல் உட்பட ஆகக் குறைந்தது 10 ஆசனங்களை கைப்பற்றுவோம் என்கின்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அவ்வெண்ணத்தை இறைவன் கபூல் செய்ய வேண்டும். அதற்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும். என்று வேண்டுவதோடு மீண்டும் ஒரு முறை இத்தேர்தலில் உழைத்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
.நன்றி.
வை.எல்.எஸ். ஹமீட்,
செயலாளர் நாயகம்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்