SLMC யினால் மூதூர் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாராளுமன்ற கதிரையில் உட்கார்வேன் – சின்ன மஃரூஃப் (வீடியோ)

அஹமட் இர்ஸாட்

1989ம் ஆண்டிலிருந்து மூதூர் தோப்பூர் பிரதேசங்களாது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியதளாமாக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து வருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் அஸ்ஸஹீத் அஸ்ரப் அவர்களுடைய காலத்திலும் தற்பொழுது இருக்கின்ற ரவூப் ஹக்கீமின் தலைமையின் கீழும் மூதூர் மக்கள் எதிர்பார்க்கின்ற அவர்களுடைய அரசியல் அபிலாசைகள் நிறை வேற்றப்படவில்லை என்பது அம்மக்களுடைய ஆதங்கமாக இருக்கின்றமையினை நியாயபுர்வமான விடயமாக எல்லோரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். 

மூதூர் பிரதேசமானது பல உயிர்களை தியாகம் செய்து சிறிலங்கா முஸ்லிம்காங்கிரசினை வளர்த்தவர்கள். பெரும் தலைவர் அஸ்ரப் கூட எனக்கு இரண்டு கண்கள் இருக்கின்றது என்றால் ஒன்று அது கல்முனை எனவும் மற்றையது மூதூர் எனவும் கூறிய வரலாற்றினைக் கொண்ட பிரதேசமாகவே மூதூர் இருந்து வருக்கின்றது. கடந்தகால இனக்கலவரங்களினால் பலவாறு பாதிக்கப்பட்ட மூதூர் மக்கள் அங்கவீனர்களாகவும், சகல அடிப்படை வசதிகளிலும் பின்தங்கியவர்களாகவே வாழ்ந்து வருக்கின்றனர். நூறு வீதம் புணர்நிர்மாணம், மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய பிரதேசமாகவே இன்றும் மூதூர் பிரதேசம் இருந்து வருக்கின்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை பிரதிநிதித்துவப்படுத்தி 2000, 2001, 2010 ஆண்டுகளில் பாராளுமன்றம் சென்ற எம்.எஸ்.தெளபீக்கும் மூதூர் மக்களுடைய அபிலாசைகளை நிறைவேற்ற வில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுக்கின்றது. இதனால் அப்பிரதேச மக்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மீது இருந்து நம்பிக்கையினை படிப்படியாக இழந்துள்ளனர் என்றே கூறவேண்டும். இதற்கு கட்சியின் தலைமையே பொறுபுக் கூறவேண்டும்.

பாரிய அனர்த்தமாக கருதப்படுகின்ற முஸ்லிம் காங்கிரசின் முக்கியபோரளியான உபைத்துள்ளவும் அவருடன் இருந்த நண்பர்களும் தங்களுடைய உயிர்களை கொடுத்து முஸ்லிம் காங்கிரசினை காற்பாற்றியதற்கு கட்சியினாலும் தலைமையினாலும் எவ்விதமான பிரதி உபகாரங்களையும் மூதூர் பிரதேசத்திற்கு செய்து கொடுக்கப்படவில்லை என்பதினாலும், ரிசானாவுக்கு சவூதி அராபியாவில் மரணதண்டனை விதிகப்பட்டபொழுது மூதூர்மக்களை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் திருப்திப்படுத்தமுடியவில்லை இவ்வாறான காரணங்களை அடிக்கிக்கொண்டும் போகின்ற இந்நிலையில் எம்.எஸ்.தெளபீக்கினை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்பதற்காக  மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசினை பிரதி நிதிதுவப்படுத்தி இதுவரை காலமும் செயற்பட்டு வந்த திடீர் தெளபீக் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தும் கட்சியினால் திட்டமிட்டு புறக்கணிப்புச் செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டமையினால் மூதூர் பிரதேச மக்கள் தனக்கு வாக்களிக்கின்ற முடிவினை எடுத்துள்ளார்கள் என்ற மேற் சொன்ன கருத்தினை திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரும் முதூர் தொகுதியின் அமைபாளருமான சின்ன மஃரூஃ என செல்லமாக அழைக்கப்படும் அப்துலா மஃரூஃப் நேர்காணலின் பொழுது தெரிவித்தார். மேலும் அவரிடம் கேற்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களின் விலாவாரியான விளக்கமும், காணொளியும் இங்கே பதிவெற்றப்பட்டுள்ளது.

அஹமட் இர்ஸாட்:- ஐக்கிய தேசியக் கட்சியில் திகோணமலை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடுக்கின்ற உங்களை அகில இலங்கை மக்கள் கங்கிரசின் வேட்பாளர் பட்டியலைச் சேர்ந்தவர் என பலவாறாக பேசப்படுவதன் உண்மை நிலை என்ன?

மஃரூஃப்:- ஐக்கிய தேசியக் கட்சியில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையில் ஒன்பது கட்சிகளும் பல இயக்கங்களை சேர்ந்தவர்களும் போட்டியிடுக்கின்றனர். அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியில் நான்கு உறுப்பினர்களும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் மூன்று உறுப்பினர்களும் ஹெல உறுமயவை பிரதி நிதித்துவப்படுத்தி ஒரு உறுப்பினருமாக மொத்தமாக ஏழு உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். இதனை ஐக்கிய தேசியக் கட்சியில் பொருளாளர் மலிக் சமரவிக்ரமவும் செயலாளர் கபீர் ஹாசிமும் கையொப்பமிட்டு அகில இலங்கை ரீதியில் எவ்வாறு தேர்தலில் நாங்கள் நடந்துகொள்ள வேண்டும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

ஆனால் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் சகல மரியாதைகளுடனும் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளாராக திருகோணமலை மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி களமிறங்கியுள்ள நிலையிலே அதனை பொறுத்துக்கொள்ள முடியாத எனது சக வேட்பாளர் அவரை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகவும் தன்னை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி நிதியாகவும் பிரச்சாரம் செய்து தனக்குறிய விருப்புவாக்குகளை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற என்னத்தில் இவ்வாறான அரசியல் காற்புணர்ச்சியுடனும் சின்னப்பிள்ளை தனமாக செயற்பட்டுவருக்கின்றார்.

இதற்கும் அப்பால் திருக்கோணமலை மாவட்டத்தில் தலைவானக பிரதி நிதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் சிங்கள தமிழ் மக்கள் முனைப்புடன் செயற்பட்டு வருக்கின்றனர். அதில் மூவின மக்களினதும் செல்வாக்கினைப் பெற்ற ஒரு முஸ்லிம் வேட்பாளராக நான் செயற்பட்டு வருவதானது இவர்களுக்கு பாரிய பிரச்சனையாக இருக்கின்றது என்பதனை நான் நன்கறிந்தவனாகவே இருக்கின்றேன். இவ்வாறு முகநூல்களிலும் ஏனைய வழிமுறைகளினூடாகவும் குறிப்பிட்ட சகவேட்பாளராலும் அவருடைய ஆதரவாளர்களாலும்  மேற்கொள்ளப்படும் பிரசாரமானது தேர்தல் முடியும் வரைக்கும் தொடரும் என்பதனை மக்கள் நன்கறிந்தவர்களாகும் நகைப்புக்குறிய விடயமாகவும் பார்த்து வருக்கின்றனர்.

அஹமட் இர்ஸாட்:- இவ்வாறு மூதூர் பிரதேச மக்கள் உங்களுக்கு வாக்களிக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய வெற்றிக்கு பிற்பாடு மூதூர் பிரதேச மக்களுக்கு எவ்வகையான அபிவிருத்திகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளீர்கள்?

மஃரூஃப்:- 30 வருடகாலமா மூதுர் மக்களில் உயிர் இழந்தவர்கள், காயமடைந்தவர்கள், வீடுகள் உடமைகளை இழந்தவர்கள், விரட்டி அடிக்கப்பட்டவர்கள், ஜீவனோபாயத்தினை முற்றாக இழந்தவர்கள் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுடைய புணர்வாழ்விற்க்கும் புணர் நிர்மாணத்திற்கும் முன்னுரிமை கொடுப்பேன் என்பதனை இவ்விடத்தில் மிக முக்கியமாக கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன். அது மட்டுமல்லாமல் முற்றாக சீரழிந்து காணப்படுக்கின்ற அபிரதேசத்தின் வீதி, போக்குவரத்து, வீடமைப்பு, சுகாதாரம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்பவற்றில் கூடிய கரிசரணையுடன் செயற்பட்டு அதனை முடிவிற்கு கொண்டுவருவதனை எனது இலட்சியமாக கொண்டு செயற்படுவேன். அத்தோடு 30 வருடகாலமாக மூதூர் மக்கள் இழந்தவைகளுக்கான இழப்பீடுகளை குறுகிய காலத்திற்குள் பெற்றுக்கொடுக்கின்ற நடவடிக்கையினை துரிதகதியில் மேற்கொள்வேன் என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன். இதனால் மூதூர் மக்கள் இலக்கம் ஒன்றுக்கும் யானைச்சின்னத்திற்க்கும் வாக்களித்த பிறகே எந்த முடிவினை எடுப்போம் என்ற முடிவில் இருக்கின்றார்கள்.

அஹமட் இர்ஸாட்:- கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் அம்பாறை மட்டக்களப்பு பிரதேசங்களில் இருக்கின்ற ஊர்களை விடவும் மூதூர் கின்னிய போன்ற பிரதேசங்கள் அபிவிருத்தியில் முற்றாக பின்தங்கிய நிலையில் காணப்படுக்கின்றது. அரசியல் வரலாற்றில் காலாகாலமாக முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளை வைத்திருகுக்கும் இப்பிரதேசங்களானது இவ்வாறு இருக்கின்றமைக்கான காரணம் என்ன?

மஃரூஃப்:- சரியான நேரத்தில் முக்கியமான கேள்வியினை என்னிடம் தொடுத்துள்ளீர்கள். 1947ம் ஆண்டில் ஏ.ஆர்.எம்.அபூபக்கர் மூலமாக ஆரம்பிக்கப்பட்ட எமது திருகோணமலை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதி நிதித்துவமானது இன்று வரைக்கும் பாதுகாக்கப்பட்டு வருக்கின்றமை உண்மையான விடயமாகும். குறிப்பாக இலங்கையில் ஏ,ஆர்.எம்.மன்சூர், பெரும் தலைவர் அஸ்ரப் ஆகியோர்களைத் தவிர அதற்கு பிற்பாடு வந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் அவர்களுடைய பாராளுமன்ற கதிரையினை தக்கவைத்துக்கொள்வதற்காக  குறிப்பிட்ட அவர்களுடைய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதிலேயே கரிசனைகாட்டி பிரதேச அமைசர்களாக மாற்றமடைந்தனர். அமைச்சர் அதாவுல்லா அக்கறைபற்று, அமைச்சர் ஹிஸ்புல்லா காத்தான்குடி, பசீர் சேகுதாவூத் ஏராவூர், அமைச்சர் அன்வர் இஸ்மாயில் சம்மாந்துரை, எம்.எச்.எம் அஸ்ர்ஃப் கல்முனை சாய்ந்தமருது, அமைச்சர் ஹசன் அலி நிந்தவூர், அமைச்சர் அமீர் அலி ஓட்டமாவடி என்று அவர்களுடைய பிரதேசத்திற்கு வெளியில் அவர்களினால் சிந்திக்க முடியவில்லை.

அந்தவகையில் நீங்கள் கூறிய பிரதேசங்களை பிரதி நிதித்துவப்படுத்திய அமைச்சர்கள் எல்லாம் அவர்களின் பிரதேசங்களில் இருக்கின்ற பிரதேச சபையின் அமைச்சர்களாக இருக்கின்றார்களே தவிர அவர்களுடைய மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் அமைச்சர்களாக கூட இருக்கவில்லை. அதனால்தான் இவர்கள் மூதூர் கின்னியா பிரதேசங்களை தார்மீக ரீதியில் சிந்தித்து அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த கால அரசாங்களில் திருகோணமலை மாவடத்தினை பிரதி நிதித்துவப்படுத்திய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்விதமான முக்கிய அமைச்சுப்பதவிகளும் கொடுக்கப்படாமையினால் இப்பிரதேசங்களானது அம்பாறை மட்டக்களப்பில் இருக்கின்ற ஊர்களுடன் ஒப்பிடுகின்ற பொழுது திருகோணமையில் உள்ள மூதூர் கின்னியா பிரதேசங்கள் அபிவிருத்தியில் முற்றிலும் பிந்தங்கிய நிலையில் காணப்படுக்கின்றன.

அஹமட் இர்ஸாட்:- திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் களமிறங்கிய சந்தர்ப்பங்களில் ஐக்கியதேசியக் கட்சிக்கு அதிகமாக வாக்களிதுள்ளார்கள். அப்படி என்றால் உங்களுடைய பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்தங்கிய நிலைமையில் இருப்பதற்க்கு ஐக்கிய தேசியக் கட்சியும் காரணமல்லவா?

மஃரூஃப்:- ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம்காங்கிரசும் திறந்த மனதுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் களங்கம் கற்பித்தது ஐக்கிய தேசியக் கட்சி அல்ல முஸ்லிம் காங்கிரசே. மாவட்டத்தில் அதி கூடுதலாக இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக சேர்ந்து தேர்தலில் கடந்த காலங்களில் களமிறங்குவதினால் பாரபட்சமில்லாமல் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடுகின்றவரக்ளுக்கும் தங்களது விருப்பு வாக்குகளை அளித்திருந்தனர். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்களித்த சரித்திரமில்லை. ஐக்கியதேசியக் கட்சியின் வாக்குகளை கொண்டும்  கதிரைகளை அலங்கரித்துக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்களுடைய சுய இலாபங்கங்களையே கருத்தில் கொண்டார்களே தவிர பிதேசங்களை அபிவிருத்தி செய்வதில் கவணம் செலுத்தவில்லை. இவ்வாறான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிற்போக்குத் தனமான செயற்பாடு காரணாம இம்முறை சிறீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அனைவரும் ஐகிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்ற எமக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளார்கள். அதிலும் முக்கியமாக எனக்கு வாக்களித்து அதிக விருப்பு வக்குகளுடன் என்னை பாராளுமன்றம் அனுப்புகின்ற நூறு வித முடிவினை எடுத்து வாக்களிக்கும் நாளினை எதிர்பார்திருக்கின்றனர்.

அஹமட் இர்ஸாட்:- திருக்கோணமலை மாவடத்தில் யானைச்சின்னத்தில் ப்போட்டியிடுக்கின்ற பிரதி அமைச்சர் எம்.எஸ்.தெளபீக், இம்றான் மஃரூஃப், வைத்தியர் போன்றவர்களுக்கு மத்தியில் உங்களுடைய வெற்றியானது எவ்வாறு இருக்கின்றது?

மஃரூஃப்:- இன்றான் மஃரூஃப் இரண்டரை வருடங்கள மாகாண சபை உறுப்பினராக இருந்தவர். தேர்தலுகு பிறபாடும் அவர் மாகாண சபை உறுப்பினராக இருக்ககூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதே போன்று நஜீப் ஏ.மஜீத் பாராளுமன்ற உறுப்பினராகவும் முதலமைச்சராகவும் செயற்பட்டு இதேர்தலில் போட்டியிடுக்கின்றார். அதே போன்று பிரதி அமைச்சராக இருந்த எம்.எஸ். தெளபீ முஸ்லிம் காங்கிரசின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுக்கின்றார். அந்த வகையிலே நான் மட்டுமே கடந்த ஐந்து வருடங்காள எவ்விதமான அரசியல் அதிகாரத்திலும் இருக்காமல் இத்தேர்தலில் களமிறக்கியுள்ளேன். ஆனால் அல்லாஹ்வின் மீது எனது மக்களின் மீதும் நம்பிக்கை வைத்தவனாக வருக்கின்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக அதிகப்படியான விருப்புப்வாக்குகளுடன் பாராளுனறம் செல்வது இந்த மஃரூவாகவே இருக்கும் என்பதனை அல்லாஹ்வை புகழ்ந்தவனாக கூறிகொள்ள விரும்புக்கின்றேன்.

அஹமட் இர்ஸாட்:- கடைசியாக உங்களுடைய ஆதரவாளர்களுக்கும் முக்கியமாக மூதூர் பிரதேச மக்களுக்கும், திருகோணமலை மாவட்டவாக்களர்களுக்கு வருக்கின்ற பொதுத் தேர்ர்தல் சம்பந்தமாக எதனைக் கூற விருபுக்கின்றீர்கள்?

மஃரூஃப்:- எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க 43 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு இந்த நாட்டுமக்களின் பல சுமைகளை இறக்கி வைத்துள்ளார். அந்த வகையிலே இந்த நாட்டிலே ஐந்து வருடத்திற்குள் பத்து இலட்சம் மக்களுக்கான வேலை வாய்ப்பினையும், திருகோணமலை மாவட்டத்தினை ஐந்தாவது சுதந்திர வர்த்தகவலயம் உள்ள மாவட்டமாகவும் பிரகடணப்படுத்தி பாரிய அபிவிருத்தியினை தொழில் வாய்ப்பினையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியமான திட்டங்களை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் எமது மக்கள் எதிர்கொள்கின்ற அடிப்படை பிரசனைகளான மீள் குடியேற்றம் கல்வி, சுகாதாரம், தூய குடிநீர் பிரச்சனை, 30 வருட யுத்தத்தினால் இழக்கப்பட்ட பெருமதிமிக்க உயிர்கள் சொத்துக்களுக்கான இழப்பீடுகள், மக்கள் எதிர் கொள்கின்ற முக்கிய பிரசனையான காணிப்பிரச்சனை, மீன்பிடி, விவசாயம் போன்றவறுக்கான உடனடித் தீர்வுகளை எமது ஐக்கிய தேசியக் கட்சியானது வருக்கின்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கின்ற தருனத்தில் அதிகூடிய விருப்புவாக்குகளுடன் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பாராளும்னற கதிரையில் உட்காருக்கின்ற என்னால் நிச்சயமாக அல்லாஹ்வின் உதவியினை கொண்டு மேற்குறிப்பிட்ட அபிவிருத்தி பணிகளை எனது மக்களுக்காக நிச்சயம் நிறைவேற்றித் தருவேன் என்பதனை கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.