UNP பஸ்ஸிலிருந்து ரவூப் ஹக்கீம் 18ம் திகதி மக்களால் வெளியில் தள்ளப்படுவார்., தயா கமகே

கவர் போட்டோ-2 அஹமட் இர்ஸாட்

 

எனக்கு முஸ்லிம் காங்கிரஸ் அல்லது அதன் தலைமைக்கு எதிராக எவ்விதமான குறோதங்களோ அல்லது பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற என்னமோ கிடையாது. நான் எதிர்ப்பதெல்லாம் அவர்களுடைய சுய இலாபங்களுக்காக எடுக்கின்ற முடிவுகளுக்கும், அதன் இஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஸ்ரஃபின் பாதையிலிருந்து முற்றாக விளகி அரசியலில் ஒருவரை தோற்கடிக்கும் குறுகிய மனப்பாங்கில் நடாத்துகிகின்ற அரசியல் நாடகங்களுக்காகவுமேயகும். அதே போன்று கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரூந்து ஹக்கீமிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் அந்த பேரூந்தில் மிதிபலகையிலே (புட்போட்) பயணிக்கின்றனர் என்ற கருத்தினை தெரிவித்திருந்தார். இவ்வாறான கருத்தினை ரவூப் ஹக்கீம் சின்னப்ப்பிளைத் தனமாக கூறியிருந்தாலும் நான் கூறுக்கின்றேன் ஐக்கிய தேசியக் கட்சியின் பேருந்தில் ஓட்டுனரும், உதவியாளரும் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளராக இருகின்ற எமது பேரூந்தில் புட்ப்போட்டில் நின்று கொண்டு பயனிக்கின்ற ரவூப்ஹக்கீமையும் அவருடைய ஆதரவாளர்களையும் இந்த நாட்டு மக்கள் கிழே தள்ளிவிட்ட செய்தியினை வருக்கின்ற 18ம் திகதி அறிந்து கொள்வீர்கள்.  

எனது பார்வையில் முஸ்லிம் காங்கிரசும் தற்போதைய அதன் தலைமையும் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக இதயசுத்தியுடன் அரசியல் ஈடுபடுவது கிடையாது. நான் எப்பொழுதும் அம்பாறை மாவட்டத்திலிருக்கும் முஸ்லிம் மக்களுடன் மிகவும் அன்னியொன்னியமாகவும் அன்பாகவும் அவர்களின் கஸ்ட நஸ்டங்களில் பங்கெடுக்கும் ஒருவாரக இருந்து வருக்கின்றேன். அதே போன்று சகோதர முஸ்லிம் மக்களும் என்னை மதிக்கின்றவர்களாகும் அன்பு செலுத்துபவர்களாகவுமே இருக்கின்றார்கள். என ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளரும் அக்கட்சியின் தேசிய மைப்பாளருமான தயா கமகேயுடனான நேர்காணலின் பொழுது ஏன் அதிமாக நீங்கள் கலந்து கொள்ளும் அரசியல் தேர்தல் பிரச்சார மேடைகளிலும், நிகழ்வுகளிலும்,ஊடக சந்திப்புக்களிலும் முஸ்லிம் காங்கிரசின் தலைமையையும் கட்சியையும் விமர்சிக்கின்றீர் என்ற கேள்விக்கே மேற்கண்ட பதிலினை தெரிவித்தார். மேலும் கேற்கப்பட்ட பல கேள்விகளுக்கான பதில்களின் விலாவரியான பதிவேற்றமும் காணொளியும் இங்கே தரப்பட்டுள்ளது.

அஹமட் இர்ஸாட்:- ஐக்கியதேசியக் கட்சியின் தேசிய அமைப்பளாக உள்ள நீங்கள் போட்டியிடுவதனால் தற்பொழுது அம்பாறை மாவட்டதின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது?

தயாகமகே:- நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் எங்களுடைய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருக்கின்றோம் அந்தவகையிலே மாவட்டத்திற்கான மொத்த ஆசனங்களில் நாங்கள் நிச்சயமாக ஐந்து ஆசனங்களை வென்றெடுப்போம்.

அஹமட் இர்ஸாட்:- எந்தக் காரணத்தை வைத்து உங்களுடைய கட்சியின் தலைமையானது முக்கியமான மூன்று வேட்பாளர்களை உங்களுடன் சேர்த்து தயாரத்ன மற்றும் கலபதி ஆகியோர்களை அம்பாறையில் களமிறக்கியுள்ளது?

தயாகமகே:- உண்மையில் இதன் பின்னால் காரணம் இருக்கின்றது. பொதுவாக அம்பாறை மாவட்டத்தில் வாழுகின்ற சமூகங்களுடன் ஒப்பிட்டு அவர்களுடைய விகிதாசாரத்திற்கு அமைவாக மூன்று சிங்கள வேட்பாளர்களையும், ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களையும், இரண்டு தமிழ் வேட்பாளர்களையும் களமிறக்கியிருக்க வேண்டும். ஆனால் இம்முறை முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதனால் முஸ்லிம் காங்கிரஸ் நான்கு வேட்பாளர்களையும் ஐக்கிய தேசியக் கட்சி ஆறு வேட்பாளர்களையும் களமிறக்குவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் முஸ்லிம் காங்கிரசும் ஒரு சிங்கள வேட்பாளரை மாவட்டத்தில் களமிறக்கியுள்ளதனால் நான்கு சிங்கள வேட்பாளர்களும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மூன்று முஸ்லிம்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களும், தமிழ் மக்களை பிரதி நிதித்துவப் படுத்தி ஒருவருமாக மொத்தமாக பத்து வேட்பாளர்கள் ஐக்கியதேசியக் கட்சி சார்பாக போட்டியிடுக்கின்றனர். 

அஹமட் இர்ஸாட்:- ஐக்கிய தேசியக் கட்சியினால் மூலம் அம்பாறைத் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள மூவரும் பாராளுமன்றம் நுழைவார்கள் என்ற நம்பிக்கை முழு உங்களுக்கு இருக்கின்றதா?

தயாகமகே:- தற்போதைய நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதனை கருத்தில் கொண்டு என்னால் உறுதியாக இதற்கான விடையினை கூறுவதனை விடவும் எங்களுடைய கட்சி சார்பாக களமிறக்கப்பட்டுள்ள முஸ்லிம் வேட்பாளர்களான சிரேஸ்ட்ட சட்டத்தரணி ரஸ்சாக், வர்த்தகரான ஆதம்லெப்பை (லொயிட்ஸ்), மற்றும் தமிழ் சமூகத்தின் சார்பாக களமிரக்கப்பட்டுள்ள  முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர் ஆகியோர்களும் அதிகப்படியான மக்கள் செல்வாக்குமிக்கவர்களாக இருப்பதனால் தேர்தலுக்கு பிற்பாடுதான் யார் பாளுமன்ற கதிரைகளில் உட்காருகின்றார்கள என்பதனை தெரிந்து கொள்ள முடியும்.

அஹமட் இர்ஸாட்:- வியாபரத்துறையில் தேசியத்திலே முக்கிய புள்ளியாகவும் தொழிலதிபராகவும் இருக்கின்ற நீங்கள் அரசியலினை தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் என்ன?

தயாகமகே:- எனக்கு அரசியலுக்குள் வருவதற்கு ஆரம்பத்தில் எவ்வகையிலும் ஆசையிருந்ததில்லை எனக்கு முதன்முதலாக அரசியலில் ஈடுபடுமாறு காமினி திசாநாயக்கவே அழைப்பு விடுத்திருந்தார். அதற்குப் பிற்பாடு லலித் அத்துலத் முத்தலி, ஜனாதிபதி பிரமதாச, டி.பி.விஜயதுங்க, ஆகியோர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரத்துங்க விஜயதாச ராஜபக்ஸ்ச மூலம் பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து அமைப்பாளர் பதவியினை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார் அப்பொழுது நான் அவரிடம் கூறினேன் எனக்கு தற்பொழுது அரசியலில் ஈடுபடுவதற்கான எந்த என்னங்களும் கிடையாது என்றும் உங்களை ஒரு சிறந்த மணிதராக பார்க்கின்ற அதே நேரத்தில் உங்களுடைய அரசியலினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே எல்லாவகையிலும் சிறந்த கட்சி எனக் கூறியதோடு நான் அரசியலில் கால் வைப்பதென்றால் அது ஐக்கிய தேசியக் கட்சியாகவே இருக்கும் எனவும் தெரிவித்திருந்தேன்.. 

அடிப்டையாக எனது குடும்பமானது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களாகவே இருந்தனர். அதன் அடிப்படையில் எனது தந்தையான சொய்சா முதலாது அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியில் இடப்பெற்றிருந்தார். அத்னோடு எனது குடும்பத்தில் பலர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக வேட்பாளர்களாக இருந்துள்ளதோடு நாங்கள் மிகவும் அர்ப்பணிப்புடனும் கடுமையான தியாகங்களுக்கு மத்தியிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்சிக்காக உழைத்தவர்களாக காணப்படுவது ஒரு புறமிருக்க தயாரத்ன அமைச்சுப்பதவிக்காக  கடந்த காலத்தில் எமது கட்சியினை விட்டு வெளியேறியதினால் கட்சியினை முன்னெடுத்துச் செல்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதே நான் அரசியலுக்குள் வருவதற்கான முக்கிய காரணமாகும்.

அஹமட் இர்ஸாட்:- அதிகளவான சிரேஸ்ட உருப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கத்தக்க உங்களுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி கிடைத்தமையினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

தயாகமகே:- தேசிய அமைப்பளர் பதிவியானது அதியுயர் உச்சபீட உறுப்பினர்களுக்கு மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட வேலையில் என்னுடன் அப்பதவிக்காக போட்டியிட்ட தயாசிறீ ஜயசேகர 36 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் நான் இருபது மேலதீக வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தமாக 56 வாக்குகளைப் பெற்று தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன். ஐக்கிய தேசியக் கட்சியினை தேசிய மட்டத்தில் அபிவிருத்தி செய்து  மக்கள் மத்தியில் மீண்டும் கொண்டு செல்வதற்கும் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதற்கும் சிறந்த நபர் என்பதனை ஐக்கிய தேசியக் கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்களும், கட்சியின் தலைமையும் தீர்மானிதிருக்கின்றனர் இவ்வாறு என்னை தெரிவு செய்தமைக்கான காரணமாகும்.

அஹமட் இர்ஸாட்:- சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சு பதவியினை கையில் எடுப்பதற்கான பிராயத்தனங்களை மேற்கொண்டிருந்தீர்கள். அதற்கு எதிரான பல சவால்களுக்கும் முகம்கொடுத்த நிலையில் அது உங்களுக்கு கைகூடாமல் போனது. அதனை எதிர்த்தவர்கள் யார்? எதற்காக எதிர்த்தார்கள்?

தயாகமகே:- கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் ஏழு உறுப்பினர்களையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பதினொரு உறுபினர்களையும் வைத்திருந்த நிலையில் இரண்டு கட்சிகளும் முதலமைச்சு பதவியினை தாங்கள் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள். தண்டாயுதபானி தமிழரசுக் கட்சியின் முடிவினை எதிர்த்தாலும் இறுதியில் ஒருமித்த கருத்துடன் செயற்பட்டார்கள். அமைச்சர் ரிசாட் பதுர்டீனின் மூன்று உறுப்பினர்களும் எங்களுக்கு ஆதரவளித்த நிலையில் எங்களுக்கு மேலதீகமாக ஒரு ஆசனம் தேவைப்பட்டது. அதையும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்திருந்த நிலையில் எங்களுடைய உறுப்பினரும் தற்போது என்னுடன் சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற கலபதி திடீரென முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினரான ஹாபிஸ் நசீரினை முதலமைச்சராக்குவதற்கு கையொப்பமிட்டதனாலும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினர் எங்களுக்கு ஆதரவளித்தவர்களை கூடிய உறுப்பினர்களை தொகைக்கு பெற்றுக்கொண்டதினாலும் எனது முதலமைச்சு கனவு காணல் நீரானது. இதுதான் நமது நாட்டில் நடக்கின்ற அரசியல் நாடகம். அதனால் யார் மேலும் எனக்கு எவ்வித கோபமோ வைரியாக்கமோ கிடையாது.

அஹமட் இர்ஸாட்:- அவ்வாறு உங்களுடைய கட்சியை சேர்ந்த கலபதி உங்களுக்கு முதலமைச்சு கிடைக்க இருந்த தருவாயில் எதிரணியுடன் சேர்ந்து செயற்பட்டதனை நீங்கள் பொருட்படுத்தாமல் தற்பொழுது ஒன்றாக விருப்பு வாக்குபெற்றுகொள்ளும் அடிப்படையில் ஓரே குடையின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிட்டுகின்றமைக்கான காரணம் என்ன?

தயாகமகே:- உண்மையில் நான் ஒரு பொழுதும் எனக்கு வாக்களிக்குமாறு மக்களை வேண்டியதில்லை. மக்களை நான் வேண்டிக்கொள்வதெல்லாம் ஐக்கியதேசியக் கட்சிக்கு வாக்களிக்குமாறே. அந்தவகையில் மக்கள் எனக்கு விருப்புத் தெரிவினை வழங்குகின்றார்கள் என்றால் அது நான் அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்தமைக்காக அவர்கள் எனக்கு தருகின்ற மரியாதையாகவே அதனை நான் பார்க்கின்றேன்.

அஹமட் இர்ஸாட்:- அம்பாறை மாவட்டத்தில் முக்கிய பிரச்சனையாக முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற காணிப்பிரச்சனைக்கு உங்களுடைய வெற்றிக்கு பிற்பாடும் அதனோடு சேர்த்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தினை உங்களுடைய கட்சி பெற்றுக்கொள்ளுமானல் எவ்வகையான தீர்வினை அதற்காக முன்வைப்பீர்கள்?

தயாகமகே:- காணிப்பிரச்சனை என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரம் மாவட்டத்தில் இருக்கின்ற பிரச்சனை கிடையாது. அது சிறுபான்மை இனமான தமிழர்களுக்கும் பெரும்பான்மையான சிங்களவர்களுக்கும் பொதுவாக இருக்கின்ற பிரச்சனையாகும். இவ்விடயம் சம்பந்தமாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திபால சிறீசேனவுடனும், கெளரவ ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்தாலோசித்திருக்கின்றேன். அவர்களும் எனக்கு சாதமாகன பதில்களை தந்துள்ளார்கள். அத்தோடு எங்களது கட்சி வெளியிட்டுள்ள பொதுத்தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்திலும் முக்கிய விடயமாக அம்பாறை மாவட்டத்து மக்களின் காணிப்பிரச்சனை சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. எனக்கு பாராளுமன்ற அரசியல் அதிகாரம் கிடைக்கப்பெற்றதற்கு பிற்பாடு உரியவர்களுக்கு சட்டரீதியான உறுதிகளையும், ஒப்பங்களையும் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கையினை மேற்கொள்வேன்.

அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய கட்சியானது மூன்று முக்கிய வேட்பாளர்களை அம்பாறையில் களமிறக்கி விருபு வாக்கு பெற்றுக்கொள்வதில் நீங்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டுவரும் அதேநேரத்தில் முஸ்லிம் காங்கிரசும் மூன்று முக்கிய வேட்பாளர்களை நீங்கள் நிறுத்தியது போன்றே யானைச் சின்னத்தில் நிறுத்தியுள்ளது. துரதிஸ்ட்டவச்மாக முஸ்லிம் காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும் வெற்றிபெற்று உங்களுக்கு தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டால் அடுத்தகட்டமாக உங்களுடைய அரசியலில் எவ்வகையான முடிவினை எடுப்பீர்கள்?

தயாகமகே:- கடைசியாக இடம்பெற்ற தேர்தலில் எனக்கு இந்த கேள்விக்கான போதியளவான அனுபவம் இருக்கின்றது. இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியானது சிங்களவர் மூவர் முஸ்லிம் இருவர் தமிழ் ஒருவர் என ஆறு வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. ஆகையால் முஸ்லிம் காங்கிரஸ் ஒரே விளம்பரப்பலகையில் மூவருடை பெயரினையும் காட்ச்சிப்படுத்தி செய்வதனை போன்று நான் மூவருக்காக அம்பாறையில் விருப்பு வாக்கு பெற்றுக்கொள்ளும் விடயத்தில் எவ்விதமான முயற்சியினையும் எடுக்கவில்லை. எங்களுடைய ஆறு வேட்பாளர்களும் அதிக வாக்குவங்கிகளை கொண்ட திறமையானவர்களே. அந்த வகையில் எனது செயற்பாடுகள் எல்லாம் கட்சிக்குறிய வாக்குகளை அதிகரிப்பதாகவே இருக்கின்றது. யார் கூடிய விருப்புவாக்குகளை பெறுகின்றார்களோ அவர்களுக்கு கதிரையில் உட்காரும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

அஹமட் இர்ஸாட்:- ஒரு அரசியல்வாதிக்கு இருக்கின்ற முக்கிய இலட்சியமான தனது பிரதேசத்திற்கு செய்ய வேண்டும் என்ற ஒரு இலக்கின் அடிப்படையில் உங்களுடைய பாராளுமன்ற வெற்றிக்கு பிற்பாடு அம்பாறை மாவட்ட மண்னுக்காக எதனை செய்வதற்கு தீர்மானித்துள்ளீர்கள்?

தயாகமகே:- நான் முழு நம்பிகையுடன் இருக்கின்றேன் அதிகப்படியான நன்மதிப்பினைப் பெற்ற ஓர் அரசியல்வாதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவிடம் கூடுதலான அபிவிருத்தி திட்டங்களை பெற்றுக்கொண்டு எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐத்து விடயங்களையும் எனது வெற்றிக்கு பிற்பாடு மாவட்டத்தில் அபிவிருத்திகளாக மேற்கொள்வதே எனது ஒரே இலக்காகும்.

அஹமட் இர்ஸாட்:- நீங்கள் நினைக்கின்றீர்களா ஏதாவது வகையில் உங்களுக்கு இந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிலிருந்து சவால்கள் இருக்கின்றன என?

தயாகமகே:- என்னைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் காங்கிரசிலிருந்து எனக்கு எவ்வித சவால்களும் கிடையாது. நான் ஏற்கனவே கூறியதைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் முதன்மையாக மக்களின் உள்ளங்களில் குடியிருக்கின்றேன். ஆனால் அம்பாறை மாவட்டத்திலும் தேசியத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிஸ் கட்சியினால் அதிகளவான சவால்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் முகம்கொடுத்து வருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:- நீங்கள் கூறியுள்ள இளைஞர் யுவதிகளுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் அரசாங்கத்தினூடாகவே தனியார் நிறுவனங்களின் ஊடாகவா அல்லது உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையின் கீழா வழங்குவதற்கு திட்டமிட்டுளீர்கள்?

தயாகமகே:- நிச்சயமாக நான் கூறியது இடம்பெறும், அதே போன்று நான் ஒருவனே அம்பாறை மாவட்டத்தில் அதிகப்படியான வேலை வாய்ப்புக்களை தனியார் நிறுவனம் என்ற வகையில் வழங்கியுள்ளேன். ஏற்கனவே எவ்வித அரசியல் அதிகாரமும் இல்லாமல் 5000 வேலை வாய்ப்புக்களை வழங்கியுள்ளோம். நாங்கள் மிக விரைவில் அம்பாறை மாவட்டத்தில் பொருளாதார வளையம் மூன்றினை நிறுவி எதுவித வருமானமும் இன்றி வீட்டில் இருக்கின்ற முஸ்லிம் தமிழ் சிங்கள இளம் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பெற்றுக்கொடுக்கும் திட்டத்தினை ஆரம்பிக்கவுளோம். அந்த வகையில் அருகம்பே, உள்ளை பிரதேசங்களிலும் மட்டக்களப்பில் பாசிக்குடா, வாகரை போன்ற பிரதேசங்களிலும், திருகோணமலையில் நிலாவெளி அடங்களாக  உல்லாச பயணத்துறையினை விருத்தி செய்வதோடு ரணில் விக்ரமசிங்கவின் பத்து இலட்சம் வேலைவாய்ப்புகளுக்கு அமைய நான் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளேன். 

அஹமட் இர்ஸாட்:- கடந்த கால தேர்தல்களில் உங்களுடைய சுவரொட்டிகளையோ அல்லது விளம்பரப் பலகைகளையோ அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை சம்மாந்துறை, அக்கறைபற்று, பொத்துவில் போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் காணக்கிடைக்க வில்லை. ஆனால் இம்முறை எல்ல இடங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட உங்களுடைய அரசியல் காரியாலயங்களும் சுவரொடிகளும், காணப்படுவதோடு இளைஞர் அமைப்புக்களும் களத்தில் உங்களுடைய வெற்றிக்காக குரல் கொடுக்கின்றனர். இதனை எந்தக் கோணத்தில் பார்க்கின்றீர்கள்?

தயாகமகே:- நான் நினைக்கின்றே சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் இருக்கின்ற இளைஞர் அமைப்புக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். முஸ்லிம் காங்கிரசானது எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை என்பதில் இளைஞர் அமைப்புக்கள் உணர்ந்து கொண்டுள்ள படியினால் ஏதாவது அவர்களுடைய பிரதேசத்திற்கு என் மூலமாக இடம்பெறலாம் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்கள். அந்த அவர்களுடைய நம்பிக்கையினை நான் ஒரு போதும் வீனடிக்கப் போவதில்லை. 

அஹமட் இர்ஸாட்:- முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக முன்வைத்து வருக்கின்ற அம்பாறை மவட்டத்திற்கான கரையோர மாவட்ட கோரிக்கையினை வருகின்ற தேர்தலுக்கு பிற்பாடு உங்களுடைய கட்சியின் தலைமை ஏற்றுக்கொண்டால் அதற்கு மாவட்டத்தில் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற நீங்கள் எதிர்ப்பீர்களா? அல்லது ஆதரவளிப்பீர்களா?

தயாகமகே:- நான் அதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை. அத்தோடு நான் கடுகளவேனும் நினைக்கவில்லை ரணில் விக்ரமசிங்க கூட அதற்கு ஆதர்வளிப்பார் என. இந்த நாட்டினை துண்டு துண்டாக உடைத்து ஆட்சி அதிகாரத்தினை எதற்காக கையில் கொடுக்க வேண்டும் என கேட்கின்றேன். ஒரே குடையின் கீழ் ஜனநாக வழியில் சக உரிமைகளுடனும் சகல மக்களும் நிம்மதியான வாழ்க்கையினை மேற்கொள்கின்ற இலங்கைத் தீவினை உறுவாக்குவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாகும். அந்த வழியிலேயே இந்த தயாகமகேயின் அரசியல் பயணமும் இருக்கும்.

அஹமட் இர்ஸாட்:- கடைசியாக உங்களின் ஆதரவளர்களுக்கும் அம்பாறை மாவடாத்தின் வாக்காளர்களுக்கும் வருக்கின்ற பொதுத்தேர்தல் சம்பந்தமாகும், உங்களுடைய வெற்றி சம்பந்தமாகவும் எதனைக் கூறவிரும்புகின்றீர்கள்?

தயாகமகே:- எனது மாவட்டம் மட்டுமல்லாமல் முழு இலங்கைக்குமான அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் அரசியல்வாதியாக என்னை மாற்றிக்கொள்ள விரும்புக்கின்றேன். அந்த வகையில் முக்கியமாக எனது மாவட்டத்தினை மையப்படுத்தி காணிகளுக்கான உரிய தீர்வு, விவசாயத்திற்கான நீர்ப்பாசன வசதி, விளைச்சளை அதிகரிக்கும் புதிய தொழில் நுட்பம், என்றும் நிலைக்கக் கூடிய கல்வியினை அபிவிருத்தி செய்யு முகமாக பாடசாலை பல்கலைகழகம் என்பவற்றின் குறைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொடுத்தல், வீட்டுத்திட்டங்கள், எல்லோருக்குமான மின்சார வசதி, அரோக்கியமான தலைமைத்துவதிற்கான தலைமைத்துவ பயிற்சிகள், இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு, சுற்றுலா துறையில் அபிவிருத்தி, சிறுவர் துஸ்பிரயோ ஒழிப்பு, மதுவிலிருந்து மக்களை பாதுகாத்தல், போன்ற விடககளை நிச்சயமாக எனது அரசியல் வாழ்க்கைக்குள் நிலை நட்டுவதே எனது நோக்கமாகும். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிளைத்து அதிகப்படியான ஆசனங்களுடன் பாராளுமன்ற அதிகாரத்தினை பெற்றுகொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு மக்களை பணிவாய் வேண்டிக்கொள்கின்றேன்.