தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!

அஸ்ரப் ஏ சமத்
கொழும்பு புளுமென்டால், ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள முஸ்லீம்கள் சிங்களவா்கள் இணைந்து கொழும்பில் தோ்தல் கேட்கும்  3 முஸ்லீம் வேட்பாளா்களான  மரிக்காா், பெரோசா முசம்மில் , முஜிபு ரஹ்மான் (3)வருக்கும் ஓரே மேடையில் 3 முஸ்லீம் பிரநிதித்துவத்துக்காக பிரச்சாரம் மேடை அமைத்து பிர்சாராம் செய்தனா்.
கொழும்பு மேல் மாகாணசபை  முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பிணா் அர்சத் நிசாம், மற்றும்  கொழும்பு மாநகர சபையில் உள்ள முஸ்லீம் உறுப்பிணா்களும் இணைந்து இவ் 3 வருக்கும் பிரச்சாரம் செய்தனா்.
கடந்த பாராளுமன்றத் தோ்தலில்  கொழும்பு முஸ்லீமகளுக்குரிய பிரநிதித்துவத்தை இழந்தவாறு இம்முறையும் அந்த தவறைச் செய்ய வேண்டாம் என மேடையில் பேச்சாளா்கள்  விரிவாக தெரிவிப்பு
முஜிபு ரஹ்மான்  நுாற்றுக்காணக்கான கூட்டங்களில்  கடந்த ஒரு  மாதங்களாக  கலந்து கொண்டமையினால் அவா் நேற்று சோ்வுற்று சுகவீனமுற்றதால்  அவர் இக் கூட்த்திற்கு வருகை தரவில்லை  வைத்தியசாலையில் என அனுமதி.என அறிவிக்கப்பட்டது.
மரிக்ககாா் – இங்கு உரையாற்றுகையில்  
நான் இன்னும் 40 வயதைத் தாண்டவில்லை. எனது தந்தை ஒரு கல்விப்பணிப்பாளா் ஆகவே இந்த கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒவ்வொரு சிறாா்களது கல்விக்காக தான் முன்நின்று உழைப்பேன், என்னை பாராளுமன்றம் அனுப்பி எனது ஊடக துறை சாா்பாாகவும் மட்டுமல்ல பாராளுமன்றத்தில் எனது சிங்கள மொழிக் குரல் ஒலிக்க வேண்டும்  என என்னை ரணில் விக்கிரமசிங்க எதிா்ப்பாா்க்கின்றாா். 
அதன் முடிபு கொழும்பு மக்களும் கொலநாவை வாழ் மக்களது கைகளிலேயே தங்கியுள்ளது. கடந்த மஹிந்தவின் இருண்ட ஆட்சியில் இருந்து நாம் விடுபட்டுள்ளோம். மீண்டும்  இந்த மஹிந்த சகல பதவிகளும் கொண்ட பிரதமா் பதவியை பெற கனவு காண்கின்றாா். அது ஒருபோதும் நடைபெறாது.  இந்த நாட்டில் உள்ள தமிழ் முஸ்லீம் மலையக கிருஸ்த்துவ சமுகங்கள் எல்லாம் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரியை ஜனாதிபதியாக்கினோம்.
அந்த வகையில்தான் எதிா்வரும் 17ஆம் திகதி நாம் எமது தலைவர் ரணில் தலைமையில்  ஆட்சியமையப்போகின்றது. அந்த வெற்றி உங்களது ஒவ்வொருவரின் கல்வி, வீடமைப்பு சுகாதாரம் கொழும்பில் வியாபாரம் ஆகிய  துறைகளில் நாம் எப்போது முன்னேறுகின்றோமோ அன்றே இந்த  மரிக்காரின் வெற்றி தங்கியுள்ளது.
பேரோசா முசம்மில் –
இந்த கொழும்பு வாழ் முஸ்லீம் சகோதரா்கள் சகோதரிகள் படும் ஒவ்வொரு பிரச்சினைகளும்  பெண்னாகிய எனக்குத்தான்  நன்கு தெரியும். நானும் 4 பிள்ளைகளின் தாய் எனக்கு இந்த கொழும்பில் உள்ள் தோட்டங்களில் வாழும்  பெண்களது ஒவ்வொரு பிரச்சினை களும் இன்னுமொரு பெண்னுக்குத் தெரியும்.
ஒரு குடும்பத்தினை நிர்வகிப்பவள் மற்றும்  குடும்பத் தலைவியாக ஒரு பெண் தான் விளங்குகின்றாாள்.  அவா்களது  வீட்டுப் பிரச்சினை தமது கணவனின் உழைப்பு இல்லாமல் இருப்பது, தமது குமா் பிள்ளைகளை வீட்டில் வைத்துக் கொண்டு புலம்பல் மற்றும்  ஒரு தொழில்  இல்லாமல்  இளைஞா்களை யுவதிகளை வீட்டில் வைத்துக்கொள்ளல் தமக்கென ஒரு நிரந்தர வீடொன்று இல்லாமல்  கஸ்டப்படுதல்.  அல்லது தனது மகனை அழைத்துக் கொண்டு கல்வியமைச்சுக்களில் தரம் 1க்கு அனுமதி கேட்டு அரசியல் வாதிகளின் சிபாா்சுக் கடிதங்களுக்காக அலைந்து திரிவதனை நான் கண்கூடாகக்க கண்டுள்ளேன். 
நான் கடந்த 30 வருடங்களாக இந்தக் கொழும்பில் சமுக சேவைகளை செய்து வருகின்றேன். நான்  பொருட்களை   கொடுத்து வாக்கு கேட்கவில்லை. எனது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும் எனது சேவையை அதாவது முஸ்லீம சமுகத்தில் இருந்து முஸ்லீம் பெண் ஒருவா் ஜ.  தே.கட்சி ஊடாக பாராளுமன்றம வருவதை யே எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிா்பாா்க்கின்றாா். என பெரோசா முசம்மில் உரையாற்றினாா்
சட்டத்தரணி மா்சுக், மேயா் முசம்மில், முஸ்லீம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பிணா் அர்சாத் நிசாம் மற்றும கொழும்பில் மாநரக சபையில் உள்ள சிங்கள முஸ்லீம் ஜ. தே.கட்சி  உறுப்பிணா்களும் இங்கு உரையாற்றினாா்கள்.
19 ferza_Fotor