கூகுளின் பங்குகளின் பெறுமதியானது 4.1 % இனால் அதிகரிப்பு !

google

கூகுளினால் அறிவிக்கப்பட்ட புதிய நிறுவனக் கட்டமைப்பினைத் தொடர்ந்து கூகுளின் பங்குகளின் பெறுமதியானது 4.1 % இனால் அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதிய அறிவிப்பானது முதலீட்டாளர்களின் பெரு வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் கூகுளின் தலைமை நிறுவனமாக ‘Alphabet’ உருவாக்கப்பட்டதுடன் அனைத்து வியாபார நடவடிக்கைகளும் அதன் கீழ் கொண்டுவரப்பட்டன.

இதனைத்தொடர்ந்து கூகுளானது மற்றைய வியாபாரங்களில் இருந்து வேறுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்தின் மூலம் கூகுளின் இலாபம் தொடர்பில் முதலீட்டாளர்கள் சிறந்த முறையில் அறிந்து கொள்ளக்கூடியதாகக் காணப்படும்.

கூகுளின் பங்குகளின் பெறுமதியானது 700 மற்றும் 800 டொலர்களைக் கடக்கும் என பங்குச்சந்தை விற்பனர்கள் எதிர்வுகூறியிருந்தனர். கூகுளானது சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் லரி பேஜ் மற்றும் சேர்ஜே பிரின் இருவரினாலும் இணைந்து உருவாக்கப்பட்டது.

தற்போமு உருவாக்கப்பட்டுள்ள ‘Alphabet’ இற்கு லரி பேஜ் பிரதம நிறைவேற்றதிகாரியாக செயற்படவுள்ளதுடன் இந்தியத் தமிழரான சுந்தர் பிச்சை கூகுளின் பிரதம நிறைவேற்றதிகாரியாக நியமிக்கப்ட்டுள்ளனர்.