அம்பாரை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளுடன் அதாஉல்லாஹ் பாரளுமன்றம் செல்வார்- அஸ்மி ஏ கபூர்

மகிந்த கதையை மடியிலே கட்டிக்கொண்டு முஸ்லீம்களின் நலனுக்காகவும் அபிவிருத்திக்காகவும் உழைத்த தேசிய காங்கிரஸின் தலைவர் அதிக விருப்பு வாக்குகளுடன் மூவின மக்களின் ஆசியுடன் முதலாவதாக தெரிவாகி பாராளுமன்றம் செல்வார். அத்தோடு தேசிய காங்கிரஸில் போட்டியிடுகின்ற இருவரும் பாராளுமன்றம் செல்வார்கள்.
முஸ்லீம் காங்கிரஸால் தொடர்ச்சியாக அரசியல் அநாதரவாக்கப்பட்ட பொத்துவில், இறக்காமம், அட்டாளைச்சேனை ஆகிய ஊர்கள் தலைவரின் மதிநுட்பத்தால் பாரளுமன்ற உறுப்புரிமைஇன்சா அல்லாஹ் பெறப்படப்போகிறது.
இவ்வாறு அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னால் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டமொன்றில் தெரிவித்தார்

வெற்றிலையை காட்டிஅதாஉல்லாஹ் வீழ்த்தி சந்திக்கு சந்தி தலைவர்கள் உருவாகி தங்களது சுய நலன்களை நிவர்த்தி செய்ய முனைகிறார்கள். எமது கட்சி தேசிய காங்கிரஸ்
அதனுடைய சின்னம் குதிரை அதன் தலைவர் அதாஉல்லாஹ். இந்த தேர்தலில் நாம் மைதிரி பால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி யினுடைய கூட்டமைப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மைதிரி இன்றைய ஜனாதிபதி .அவருடன் தான் எமது தலைமை கூட்டமைத்திருக்கிறது. அந்த தலைமையின் கீழ் தான் நாங்கள் போட்டியிடுகிறோம்.
இதுதான் இன்றைய நிலை அதாஉல்லாஹ் எனும் தலைமையை வீழ்த்தி தமது சுய நல அரசியலை மேற்கொள்ள சிலரினது முயற்ச்சி ஒரு போதும் வெற்றியடைய போவதில்லை.மக்களை அச்ச நிலைக்குட்படுத்தி பல போலி வேசங்களை போடுபவர்களை இறைவன் நிச்சயம் தோல்வியடையச்செய்வான்.என்றார்