பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்இ 8 விக்கெட்டுக்களும் 63 பந்துகளும் மீதமிருக்க பாகிஸ்தானை வெற்றிகொண்டது பங்களாதேஷ்.
பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் அணிஇ மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-–0 என்ற அடிப்படையில் பங்களாதேஷிடம் தாரைவார்த்தது.
கத்துக்குட்டி அணியான பங்களாதேஷ் 16 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 250 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான அசார் அலி 101 ஓட்டங்களை விளாசினார். மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சமி அஸ்லாம் 45 ஓட்டங்களையும், சொஹைல் 52 ஓட்டங்களையும் அணிக்காகப் பெற்றுக்கொடுத்தனர். ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் வீரர்களான மொர்டாசா, ருபெல், அரபாத், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர். 251 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் 39.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து பாகிஸ்தானை மூன்றாவது போட்டியில் வீழ்த்தி ஹெட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது.
பங்களாதேஷின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக இக்பால் மற்றும் ஷர்கர் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஷர்கர் 127 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, மறுமுனையில் தமீம் இக்பால் 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொஹமதுல்லா 4 ஓட்டங்களுடன் வெளியேற, ரஹீம் 49 ஓட்டங்களைச் சேர்த்தார்.
இறுதியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக ஷர்கரும், தொடர்நாயகனாக தமிம் இக்பாலும் தெரிவுசெய்யப்பட்ட னர்.