கை நழுவி செல்லும் சம்மாந்துறையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் !!

  qqசுல்பிகார் 

எதிர் வரும் பொது தேர்தல் சம்மாந்துறை மக்களை பொருத்தவரை மிக முக்கியமான தேர்தல் ஆகும் ஏனெனில் சுதந்திர இலங்கையின் வரலாற்றில் சுமார் 40 ஆயிரம் வாக்ககுகள் உள்ள மிக பெரிய ஊரான சம்மாந்துறை கடந்த ஒரு தசாப்த்த காலமாக ஒரு பாராளமன்ற உறுப்பினரை பெற்று கொள்வதில் தோல்வியை அடைந்துள்ளமையாகும்.

.இலங்கை நாட்டில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் மூன்று நகரங்கள் உள்ளன.கொழும்பு ,புத்தளம் மற்றும் சம்மாந்துறை ஆகும்.ஒரு பாராளமன்ற உறுப்பினர் தனித்து நின்று பெறுவதற்கான வாக்கு பலம் இருந்த போதும் கடந்த இரண்டு பாராளமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட எந்த ஒரு வேட்பாளரும் சம்மாந்துறை ஊர் சார்பில் வெற்றி பெறவில்லை.
சம்மாந்துறையில் சுமார் 53 ஆயிரம்முஸ்லிம்கள் வாழ்கின்ற அதேவேளை சுமார் 40 ஆயிரம் முஸ்லிம்கள் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். 

இவ்வாறு மிக பெரிய சனத்தொகையையும் வாக்காளர்களையும் கொண்டு இருக்கும் சம்மாந்துறை பாராளமன்ற உறுப்பினரை பெற்று கொள்ளாததிற்கு இரண்டு விடயம்கள் தடையாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
01. கட்சி ரீதியாக வாக்காளர்கள் பிரிகின்றமை 02.வேட்பாளர்களின் குடும்ப பின்னணியும் தனிப்பட்ட செல்வாக்கும் 

மேற்படி இரண்டு விடயங்களும் கடந்த இரண்டு பொது தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தியதன் காரணமாக சம்மாந்துறை மண் தனது பாராளமன்ற உறுப்புரிமையை இழந்து அரசியல் அதிகாரம் இன்றி அரசியலில் அனாதையாக ஒரு தசாப்தத்தை கழித்துள்ளது. 

எதிர்வரும் பொது தேர்தலிலும் சம்மாந்துறை மண் மேற்படி இரண்டு விடயங்களை இறுக்கி பற்றி பிடித்துள்ளதனால் அளிக்கப்படும் வாக்குகள் பல கூறுகளாக அதாவது பல கட்சிகளுக்கு அளிக்கபடுவதன் ஊடாக மீண்டும் ஒரு தவறை நோக்கி நகருவதாகவே பேசப்படுகிறது.

எதிர்வரும் பொது தேர்தலில் சம்மாந்துறை மண் சார்பாக முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூரும் முன்னால் தென்கிழக்கு பல்கலை கழக உப வேந்த்தர் இஸ்மாயில் அவர்களும் இரண்டு கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர்.மன்சூர் முஸ்லிம் காங்கரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியிலும் இஸ்மாயில் அகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சியிலும் போட்டியிடுகின்றனர்.இந்த இரு முனை போட்டி சம்மாந்துரையின் பாராளமன்ற பிரதிநித்துவத்தை உறுதி படுத்து வதிற்கு பதிலாக இல்லாமல் செய்யும் என பரவலாக பேச படுகிறது. 

ஏனெனில் சம்மாந்துறையில் தேர்தலில் 26 ஆயிரம் வாக்குய் அளிக்கப்படும் என எதிர்வு கூற படுகிறது அளிக்கபடும் வாக்கு இரண்டு வேட்பாளர்களுக்கும் சமமாக பிரிவதன் காரணமாக இருவரும் சுமார் 13 ஆயிரம் வாக்குகளை பெரும் போது அவர்களின் வெற்றி வாய்ப்பு சற்று தூரமாகி செல்வதாகும். 

இது இவ்வாறு இருக்க 7 உறுப்பினர்களை கொண்ட திகா மடுல்லை மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் அல்லது ஒரு கட்சி வெற்றி பெற வேண்டுமானால் ஆகக் குறைந்தது 55 ஆயிரம் வாக்குகளை அல்லது விருப்பு வாக்குகளை பெற வேண்டியது மிக முக்கிய அடிப்படைத் தேவையாகும்.ஏனெனில் திகாமடுல்லை மாவட்டத்தில் சுமார் 4 இலட்சத்தி 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் இதில் 70 % வீதம் அளிக்கபடும் பட்சத்தில் 3 இலட்சத்தி 30 வாக்குகள் அளிக்கப்படும் .போனஸ் ஆசனத்தை கழித்து அளிக்கப்படும் மொத்த வாக்கை 6 உறுப்பினர்களால் பிரிக்கும் போது சுமார் 55 ஆயிரம் வாக்குகள் அல்லது விருப்பு வாக்குகள் வெற்றி பெருவதக்கு தேவைப்படும் என்பது கணித ரீதியான சூத்திரம் ஆகும் .
கணித ரீதியான சூத்திரத்தின் அடிப்படையில் மன்சூர் வெற்றி பெற அவரின் சொந்த ஊர் வாக்கு 13 ஆயிரத்தை கழித்தால் மேலும் 43 ஆயிரம் வாக்குகள் தேவை படுகிறது மாவட்டம் முழுவதும் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் 35 ஆயிரம் வாக்கு அளிப்பார்கள் என எடுத்து கொண்டாலும் மொத்தம் அவரால் 48 ஆயிரம் வாக்குகளையே பெற முடியும். எனவே வெற்றி பெற இன்னும் 7 ஆயிரம் வாக்குகள் தேவை படுகிறது.

அதே போன்று உப வேந்தர் இஸ்மாயில் வெற்றி பெற அவரின் ஊரில் அளிக்கப்படும் வாக்குகளை கழித்தால் அவரின் கட்சி வெற்றி பெற இன்னும் 42 ஆயிரம் வாக்ககுகள் தேவைப்படுகிறது .இருப்பினும் அவரின் கட்சி மாவட்டம் முழுவதும் அவரின் ஊரையும் சேர்த்து சுமார் 26 ஆயிரம் வாக்குகளை பெரும் என எதிர்வு கூற படுகிறது .குறிப்பாக அவரின் கட்சி சம்மாந்துறைக்கு வெளியே சாய்ந்த மருதுவில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளையும் பொத்துவிலில் 3 ஆயிரம் வாக்குகளையும் ஏனையே முஸ்லிம் ஊர்கள் அனைத்தில் இருந்தும் 4 ஆயிரம் வாக்குகளை பெரும் என எதிர்வு கூறப்படுகிறது. 

தேர்தல் கள நிலவர ரீதியாகவும் கணித ரீதியான சூத்திரத்தின் அடிப்படையிலும் மன்சூரும் உப வேந்தர் இஸ்மாயிலும் தோல்வி அடைவது உறுதிப்படுத்த படுவதனை அவதானிக்க முடியும்

இருப்பினும் மன்சூரின் வெற்றிக்கு தேவையான 7 ஆயிரம் வாக்குகளை பெறுவது என்பது உப வேந்தர் வெற்றி பெற அவரின் கட்சிக்கு தேவைப்படும் 29 ஆயிரம் வாக்குகளுடன் ஒப்பிடும் போது மிக சாத்தியமான விடயமாகும்.
எனவே சம்மாந்துறை மக்கள் தமது பாராளமன்ற பிரதி நிதியை பெருவதற்கு சாத்தியமான வழியை பின்பற்றுவதன் ஊடாக அடையலாம் என்பது பொருத்தமான கருத்தாகும்