இந்தியா பிரமாண்ட வெற்றியை அடைந்தது.
உலகக் கிண்ண போட்டிகளில் இன்று நடைப் பெற்ற இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிப் பெற்றது.
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைப்பெற்ற போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
சயின்மன் அன்வர் 35 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போதிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியியை தொடர்ந்தும் ஓட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்கு இந்திய பந்து வீச்சாளர்கள் சந்தர்ப்பம் வழங்கவில்லை.
சிறந்த பந்து வீச்சில் ஈடுபட்ட அஸ்வின் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 103 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் விராத் கோலி ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவு செய்யப்பட்டார்.