கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமை ஆதரிப்பதற்கு கண்டி வாழ் மலாய் முஸ்லிம் சமூகத்தினர் முன்வந்துள்ளனர்.
இது தொடர்பிலான சந்திப்பொன்று சனிக்கிழமை [08] இரவு அமைச்சர் ஹக்கீமுக்கும் கண்டி மாவட்ட மலாய் முஸ்லிம் சமூகத்தினரருக்குமிடையில் கண்டி ,பேராதனை வாடி வீட்டு பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
மலாய் சமூகத்தினர் தேசாபிமானத்துடன் இலங்கைக்கு ஆற்றிய பங்களிப்பை சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர் ஹக்கீம், கலாநிதி டி.பி .ஜாயா,ஜஸ்டிஸ் அக்பர் போன்றோரையும் நினைவுகூர்ந்தார்.
பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையணிகளில் அவர்கள் ஆற்றிய சேவையையும் கல்வித் துறையில் அவர்கள் காட்டிய க ரிசனையையும்அவர் பாராட்டிப் பேசினார்.
இந்தோனேசியா,ஜாவா ,மலேசியா ஆகியவற்றிலிருந்து இங்கு வந்து குடியேறிய மலாயர்கள் காலனித்துவ ஆட்சியிலும் சிங்களமன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் இந்நாட்டின் பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் இறைமைக்கும் பாரிய பங்களிப்புச் செய்தனர்என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
மலாய் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அமையவிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அரசின் ஊடாக உரியதீர்வுகள்பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மலையக மலாய் சங்கம் ,நாவலப்பிட்டி மலாய் சங்கம் ,கொஸ்லம் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளானமலாய் மக்கள் இதில் கலந்துகொண்டனர் .
எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு கண்டி மாவட்டத்தில் 5000இற்கு மேற்பட்ட மலாய் மக்கள் தகுதிபெற்றுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது .
துனியா மலாயு துனுக்கியா இஸ்லாம் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் சிலங்கா முஸ்லிம் காங்கிரஸின்முக்கியதஸ்தருமான யு.ரி.எம்.அன்வர்,கொழும்பு சாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் சட்டத்தரணி ரி.கே.அசூர் மற்றும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் ,நீர் வழங்கள்,வடிகால் அமைப்பு சபையின் பிரதித் தலைவருமான சபீக்ரஜாப்தீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.