நான் 18வயதிலே பாடாசாலை மாணவனாக இருந்த போது வடக்கிலே சொந்த மண்ணிலே இருந்து சொப்பின் பேக்குடன் அகதியானேன் !

DSC00443_Fotorஎம்.சி.அன்சார்
எமது தாய்மார்களின் கண்ணீரினாலும், துஆப்பிராத்தனையினாலும், பெருந்தலைவர் அஷ்ரபின் பெரும்முயர்ச்சியினாலும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இன்று ரவுப் ஹக்கீமின் சுயநலப்போக்கினால் திசைமாறிப் அழிவுப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. எதிர்வருகின்ற தேர்தலில் தாய்மார்களும் ஹக்கீமுக்கு தகுந்த பாடத்தினைப் புகட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலினை ஆதரித்து நேற்றுமுன்தினம்(08) மாலை சம்மாந்துறை மலையடிக்கிராமத்தில் நடைபெற்ற பெண்களுக்கு விளக்கமளிக்கும் பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வேட்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலின் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில்  அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே-
நான் 18வயதிலே பாடாசாலை மாணவனாக இருந்த போது வடக்கிலே சொந்த மண்ணிலே இருந்து சொப்பின் பேக்குடன் அகதிநானாவேன். வடபுலத்து முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளினால் விரட்டியடிக்கப்பட்டு அகதிமுகாம்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சொல்லொன்னா துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த போது அந்த மக்களின் கண்ணீரைத்துடைக்க ரவுப் ஹக்கீம் எதுவுமே செய்யவில்லை. இந்த ஒரு இலட்சம் அகதி மக்களின் கண்ணீரைத்துடைக்க வேண்டும். இவர்கள் நல்ல வீடுகளில் வாழவேண்டும். இவர்களின் பிள்ளைகள் கல்வியினை கற்கவேண்டும், பல்கலைக்கழகம் சென்று உயர்கல்வி கற்க வேண்டும். என சிந்தித்து என்னுடைய பொறியியலாளர் தொழிலை இராஜினாச் செய்து இறைவனை நம்பி அப்போது பாராளுமன்றத்தேர்தலில் குதித்தேன்.
எனக்காக அகதிமுகாம்களுக்குளும், வீடு வீடாகச்சென்று  எமது தாய்மார்கள் அரசியல் பிரசாரம் செய்தார்கள். அவர்களின் அர்ப்பணிப்பினால் நான் பாராளுமன்ற உறுப்பிராக தெரிவு செய்யப்பட்டேன்.  பாராளுமன்ற உறுப்பிராகவும், அமைச்சராகவும், கட்சித்தலைவராகவும் திகழ்ந்து 3வருடங்களுக்குள் அனைத்து வீடுகளையும் கல்வீடுகளாக அமைத்துக்கொடுத்துடன், தொழில் வாய்ப்புக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஐந்து வருடகாலங்களுக்குள் செய்து கொடுத்தேன். 
ரவுப் ஹக்கீம் செல்லும் பாதை பிழையானது. முஸ்லிம் சமூகம் அவருக்கு பின்னால்  சென்றால் இந்தச் சமூகம் அழிந்துவிடும் என்பதற்காகத்தான் அனைத்து மக்களுக்காவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தோம். 
இந்த நாட்டு அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்து வருகிறது. சகல மக்களின் உரிமைகளையும் எவ்வித அப்பழுக்கற்ற முறையில் அனுபவிப்பதற்கு தேவையான அடித்தளத்தினை இட்டுவருகின்றது. 
கடந்த ஜனாதிபதித்தேர்தலில் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியிலிருந்து நான் உட்பட கட்சியினர் வெளியேறிபோது கோத்தாபே ராஜபக்ஷ என்னை கொலை செய்யப்போவதாக கூறினார். நான் முஸ்லிம் சமூகத்திற்காக தைரியமாக வெளியேறினோன். 
இந்த சம்மாந்துறை மன் கடந்த 10 வருடகாலமாக இழந்து நிற்கின்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு இந்த மண்ணின் மைந்தன் கலாநிதி இஸ்மாயிலுடாகக் கிடைத்துள்ளது.
கலாநிதி இஸ்மாயில் கடந்த 6வருடங்களாக தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் உபவேந்தராக இருந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பாரிய அபிவிருத்தியினைச் செய்துள்ளார். ஆனால் அவருக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால் அம்பாறை மாவட்டத்தை அபிவிருத்திப் புரட்சியை ஏற்படுத்துவார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் யானைச்சின்னத்திற்கும், வெற்றிலைச்சின்னத்திற்கும் அளிக்கப்படுகின்ற முஸ்லிம் வாக்குகளினால் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்கள் பாராளுமன்றம் செல்லுவார்கள்.
எனவே, எதிர்வருகின்ற தேர்தலில் அம்பாறை மாவட்ட அனைத்து தாய்மார்களும், சகோதரிகளும் அகில மக்கள் காங்கிரஸை ஆதரித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும். இம்மாவட்டத்தின் அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்த தாய்மார்கள் அதற்கான சந்தர்ப்பத்தினை எமது கட்சிக்கு தரவேண்டும் . என்றார்.
DSC00422_Fotor
 
 DSC00414 - Copy_Fotor DSC00409 - Copy - Copy_Fotor