பணத்துக்காக அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் சாய்ந்தமருது பிரச்சாரக் கூட்டத்தில் ஜெமீல்

1_Fotor aa

-எம்.வை.அமீர்-

தான் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு கட்சியில் இருந்து விலகியதாக சிலர் கூறிவருவதாக குறிப்பிட்ட அவர் அப்படி நான் பணத்துக்காக அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் என்றும் சாய்ந்தமருது பொலிவோரியன் திறந்த வெளியரங்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளர் கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் பல்வேறு பதவிகள் வகித்தவரும் கிழக்குமாகாணசபையின் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல், நான் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற தலைவரையோ அல்லது பாராளமன்ற உறுப்பினர்களையோ பின்பற்றி அக்கட்சியில் இணைந்து கொள்ளவில்லை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சந்தர்ப்பத்தில் தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்த வேளையில் அப்போது நமது நாட்டில் இருந்த குழப்பமான சூழ்நிலையில், பல்கலைக்கழக கல்வியை நமது மாணவர்கள் தொடர்வதில் இருந்த சிக்கல்நிலைகளின் காரணமாகவும் இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தரக் கூடிய ஒரே மகன் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் தான் என உணர்ந்ததன் காரணமாகவே அவருடன் இணைந்து செயற்பட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்ற பெரிய நிறுவனத்தை உருவாக்கியதாகவும் தனக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் அப்போது இருந்ததில்லை என்றும் தெரிவித்தார்.

எங்களது முயற்ச்சியால் உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் தற்போது தங்களது சித்து விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துள்ளார்கள் என்று தெரிவித்த அவர், அண்மையில் இடம்பெற்ற பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவின்போது நமது பிரதேசத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் இருவர் இருந்தும் அவர்களை திட்டமிட்டு புறக்கணித்து விட்டு, அவர்களுக்கு வாசியான வெளியூர் ஒருவரை உபவேந்தராக நியமித்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் காலங்களில் மட்டும் நமது பிரதேசங்களுக்கு வந்து பசப்புவார்த்தைகளைக்கூறி வாக்குகளைப் பெற்றுக்கொண்டு பின்னர் எங்களை நட்டாற்றில் விடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைமைத்துவத்தையும் அதனோடு ஒட்டிக்கொண்டிருக்கும் கிளிகளையும் இன்னும் நாம் ஆதரிக்க வேண்டுமா என்று கேள்வியேழுப்பிய ஜெமீல், மறைந்த தலைவரைப் போன்று ஒரு அகதியாக வந்த முஸ்லிம் மக்களின் மீது உண்மையான அக்கறையுடன் செயற்படும் அமைச்சர் றிசாத் போன்ற தலைவர்களை ஆதரிப்பதன் ஊடாக தலைவர் அஷ்ரப் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர முடியும் என்றும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தான் நேரடி அரசியலில் இறங்கப்போவதில்லை என்று தெரிவித்த ஜெமீல், சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் கங்கிரஸ் பெற்றுத்தராது என்றும் சாய்ந்தமருதின் கனவுகளை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்களால் மட்டுமே முடியும் என்றும் தெரிவித்தார்.

தன்னையும் சிறாசையும் பிரித்து வைத்து சிலர் தங்களது அஜண்டாக்களை அடைந்துகொண்டதாக குறிப்பிட்ட ஜெமீல், இனிமேல் அவ்வாறான எதுவும் நடக்காது என்றும் சாய்ந்தமருதின் அபிவிருத்திக்கு நாங்கள் இணைந்து செயற்படுவோம் என்றும் தெரிவித்தார்.

வர்த்தக சமூகத்தின் தலைவர் அஸீம் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் பிரதி அமைச்சரான சேகு இஸ்ஸடீன் அவர்கள் கலந்து அம்பாறை மாவட்ட தேர்தல் களநிலவரங்கள் பற்றிய அவரது பார்வையை வெளியிட்ட அதேவேளை கலாநிதி சிறாஸ் தான் கல்முனை மாநகரசபையை தனக்குக்கிடைத்த அந்த குறுகிய காலத்தில் இன பகுதி வேறுபாடுகள் எதுவும் இன்றி செயற்பட்டதாகவும் பாரிய வேலைத்திட்டங்களை நிறைவேற்றியதாகவும் மாநகரசபையை விட்டு வெளியேறும்போது இருப்பில் நிறைய பணத்தை சேகரித்து வைத்திருந்ததாகவும் இப்போது ஒரு கடித உறையை வான்குவதர்க்குக் கூட பணமில்லாது இருப்பதாகவும் தெரிவித்தார்.

2_Fotor ab 3_Fotor ac 4_Fotor ad