தந்தையின் வழியில் சேவையாற்றுவதே எனது இலட்சியம் !

கவர் போட்டோ_Fotor

 

அஹமட் இர்ஸாட்

வீடியோ இம்றான் மஃரூபுடனான நேர்காணல்

 திருகோணமலை மாவட்டத்தில் புதியதோர் அரசியல் கலாசாரத்தினை உறுவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். அந்தவகையில் அவ்வாறான மாற்றம் உடனடித் தேவைப்பாடாக இருக்கின்றது என்பதனை மக்கள் உணர்ந்தவர்களாக செயற்பட்டுவருகின்றார்கள்.

ஆகவே கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்கள் எமது அரசாஙகத்தில் கடுகளவேனும் இடபெறமாட்டாது எனக கூறிக்கொள்ளும் நான் மிக முக்கியமாக இளைஞர் யுவதிகளின் அடிப்படை பிரச்சனைகள், அவர்களுடைய வேலைவாய்ப்புக்கள், மீள் குடியேற்றம், கல்வி, சுகாதாரம் என்பவற்றிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு எனது அபிவிருத்தியினை எனது தந்தயின் வழியில் மெற்கொள்ளும் பொருட்டு அதற்கான அரசியல் அதிகாரத்தினை பெற்றுக்கொள்வதற்காக தன்னை மாவட்டத்தில் இருந்து அதிகபடியான விருப்பு வாக்குகளுடன் இம்முறை பாராளுமன்றம் செல்வதற்கான வாய்பினை தருமாறு மிகப்பணிவாய் திருகோணமலை மாவட்ட மக்களை வேண்டிக்கொள்கின்றேன்.

 என முன்னாள் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அஸ்ஸஹீத் மஃரூபின் இளம் அரசியல் வாரிசும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை மாவ்வட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், தற்போதைய திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ர வேட்பாளருமான இம்றான் மஃரூப் உடனான ந்நெர்காணலின் பொழுது மேற்கூறிய விடயத்தினை தெரிவித்தார்.

அஹமட் இர்ஸாட்:-

 திருகோணமலையில் முக்கிய அரசியல் புள்ளியான அஸ்ஸஹீத் மஹ்ரூஃபின் மகனாக இருக்கின்ற இளம் வயதான உங்களை திருகோணமலை மாவட்ட மக்கள் இம்முறை பாராளுமன்றம் அனுப்புவதற்கு தயாராக இருக்கின்றார்களா?

இம்றான் மரூஃப்:-

 எனது அரசியல் வருகையானது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் அதிகாரம் இருந்த காலத்திலேயே அதாவது 2010ம் ஆண்டில்  இருந்தே ஆரம்பமாகின்றது. அப்பாராளுமன்றத் தேர்தலில் சொற்பவாக்கு வித்தியாசத்திலே நான் தோல்வியைத் தழுவியிருந்தேன். அதனை தோல்வி என்றும் கூறமுடியாது.

ஏன் என்றால் எனது தந்தையான அல் ஹாஜ் மஃரூஃப் இப்பிரதேசத்தில் இருபது வருடகாலமக தோல்வியை தழுவிடாத மக்களின் ஆதரவினை பெற்ற ஒருவராக இருந்துவந்தவர். அந்தவகையிலே அவருடைய சேவையினை பெற வேண்டும் அல்லது அவருடைய குடும்வாரிசுகளின் அரசியல் பிரவேசத்திலிருந்து பிரதேசத்தின் அரசியல் அபிலாசைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த பாராளுமன்ற தேர்தலில் குறுகிய தேர்தல் பிரச்சாரத்துடன் இருபதாயிரத்துக்கு அதிகமான வாக்குகளை மக்கள் எனகளித்திருந்தனர்.

அதே போன்று என்னை கடந்த மாகாண சபைத்தேர்தலிலும் வெற்றியடையச் செய்தனர். ஆகவே எனது தந்தையின் துரதிஸ்டவசமான மறைவுக்கு பின்னர் இளம் தலை முறையினர் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதற்காக இம்முறை என்னில் அதிகம் நம்பிக்கை வைத்தவர்களாக ஒருமித்த குரலில் செயற்பட்டுவருக்கின்றனர். அந்தவகையில் இன்ஸா அல்லா எனது வெற்றியினை மக்கள் உறுதிப்படுத்தி விடார்கள் என்றே கூறமுடியும்.

அஹமட் இர்ஸாட்:-

உங்களுடைய தந்தையின் ஆதரவாளர்கள் தந்தையின் வயதினை ஒத்தவர்களாகவே பெரும்பாலானோர் காணப்படுக்கின்றனர். அந்த வகையிலே தற்பொழுது உங்களுடன் கைகோர்துள்ள தந்தையின் ஆதராவாளர்கள் உங்களுக்கு தரும் கெளரவத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

இம்றான் மரூஃப்:-

எனது தந்தை 1997ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பொழுது நான் மிகவும் சிறு வயதுடையவானகவே இருந்தேன். இன்று பதினெட்டு வருடங்களாகியும் அவர்மேல் மரியாதையுடன் இருக்கின்ற அவருடைய ஆதரவளர்கள் என்னைக் கண்டதுமே அவர்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் வடிவதனை பார்க்ககூடியதாக இருப்பது மட்டுமல்லாமல் என்னுடன் அவர்கள் கைகோர்துள்மையும், என்னுடன் கூடவே இருந்து எமது மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறுவது மட்டுமல்லாமல் எனது கஸ்ட நஸ்டங்களிலும் பங்கேற்றுக் கொள்ளும் ஒரு மிகப்பெரிய விடயமாகவே நான் கருதுகின்றேன்.

இதனை அவர்கள் எனது தந்தைக்கு கொடுக்கும் கெளரவத்தினை எனது அளிக்கும் கெளரவமாகவே நான் பார்ப்பதோடு, அவர்களுக்கும் அவர்களுடைய வருங்கால சந்ததியினருக்கு என்றும் நன்றிக்கடன் உடையவானாகவே இருப்பேன் என தெரிவித்துக் கொள்வதில் பெரும்மகிழ்ச்சி அடைகின்றேன்.

அஹமட் இர்ஸாட்:-

ஐக்கியதேசியக் கட்சியானது அன்மைகாளமாக இளம்பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற வேலைத்திட்டத்தில் கால்பதித்து வருக்கின்றமையினை நீங்கள் எந்தக் கோணத்தில் பார்க்கின்றீர்கள்?

இம்றான் மரூஃப்:-

இளைஞர்கள்தான் எதிர்காலத்தின் தலைவர்கள் எனக்கூறும் விடயம் ஒரு புறமிருக்க எமது கட்சியின் தலைவர் கூட 1977ம் ஆண்டு தனது 24ம் வயதிலேயே பராளுமன்றம் சென்றவர். அந்த வகையிலேயே அவர் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இளம் சமூதயத்தினரின் குறை நிறைகளை அவர்களால் தெரிவு செய்யப்படும் தலைமைத்துவத்தின் மூலம் நிறை வேற்றிக்கொள்ளக்கூடிய ஓர் புதிய அரசியல் கலாச்சாரத்தினை நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டு வருக்கின்றார்.

அதுமட்டுமல்லாமல் அரசியலில் இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் எமது தலைமையும், கட்சியும் அதிகப்படியாக என்னைப்போன்ற இளைஞர்களை பாராளுமன்றம் அனுப்புவதற்கு திட்டங்களை வகுத்து நடைமுறைபடுத்தி வருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:-

வருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றம் செல்லும் வாய்ய்ப்பு கிடைத்தால் நீங்கள் உட்கார்ந்த மாகாண சபை கதிரையின் வெற்றிடத்திற்கு ஒரு இளைஞனையா தெரிவு செய்து கிழக்கு மகண சபைக்கு அனுப்புவீர்கள்?

இம்றான் மரூஃப்:-

இருக்கின்ற எமது மாகாண சபையிலே ஒரே ஒரு மாகாண சபை உறுபினராக நான் மட்டுமே ஐக்கியதேசியக் கட்சி சார்பாக திருகோணமைலையை பிரதி நிதித்துவப்படுத்துகின்றேன்.  இன்னும் இரண்டரை வருடங்கள் கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் மிகுதியாய் இருக்கின்றது. எனக்கு பிற்படு அரசியலில் முதிர்ச்சி பெற்றவர்களும் இருக்கின்றார்கள் அவர்களுக்கு நிச்சயமாக அந்த இடம் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருந்தும் எனது எதிர்கால அரசியலில் சமூகத்துக்கு நன்மைபயக்கூடிய இளம் அரசியல் தலைவர்களை உறுவாக்குவதில் நான் முனைப்புடன் செயற்படுவேன் என்பதனை இங்கே ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

அஹமட் இர்ஸாட்:-

திருகோணமலை மாவட்டத்தில் இளைஞர், யுவதிகள் பலர் வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில் உள்ளனர். இதற்கு உங்களிடம் உள்ள தீர்வு என்ன?

இம்றான் மரூஃப்:-

இந்த பொதுத் தேர்தலின் பின் அமையவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது. அதில் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகளை எனக்கூடாக வழங்குவதாக அண்மையில் என்னை விசேடமாக சந்தித்த பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க அவர்கள் உறுதியளித்துள்ளார். இதன் மூலம் பெரும்பாலான இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும். 

இதனைவிட திருகோணமலை மாவட்டத்தில் பொருளாதார மையமொன்று தாபிக்கப்படவுள்ளது. இதனூடாகவும் பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்க முடியுமாக இருப்பதால் வேலைவாய்ப்பு வழங்குவது என்பது அவ்வளவு பிரச்சினைக்குரிய விடயமாக இருக்காது.

அஹமட் இர்ஸாட்:-

திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்களுக்கான மீன்பிடித் தடை தொடர்பாக அவ்வப்போது ஊடகங்கள் மூலம் செய்திகள் வருகின்றன. இந்தப் பிரச்சினையை எவ்வாறு அணுகப் போகின்றீர்கள்?

இம்றான் மரூஃப்:-

எமது மக்களின் பிரதான வாழ்வாதாரங்களுள் மீன்பிடி முக்கியமானது. பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் மீது அவ்வப்போது தடைகள் வருகின்றன. இது தொடர்பாக சகல மேல் மட்டத்தினருடனும் ஏற்கனவே பேசியுள்ளேன். பெரும்பாலும் கரையோர மீன்பிடியிலேயே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, நவீன முறையிலான ஆழ்கடல் மீன்பிடிக்கு தேவையான வசதிகளை கட்டங்கட்டமாக ஏறப்படுத்திக் கொடுப்பதன் மூலம் அதிகமானோரை நவீன மீன் பிடியில் ஈடுபடுத்த முடியும். இது அமுலுக்கு வரும் வரையில் சில விசேட ஏற்பாடுகள்; மூலம் மீனவர்களுக்கு உதவி அளிக்க முடியும் என எதிர்பார்க்கிறேன்.

அஹமட் இர்ஸாட்:-

திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய அலுவலகங்களில் முக்கிய பதவிகளில் முஸ்லிம் அதிகாரிகள் இன்மையினால் முஸ்லிம்களுக்கு பாதிப்புகள் இருப்பதாக மிக அண்மையில் கூட தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கான தீர்வு என்ன?

இம்றான் மரூஃப்:-

உண்மை தான் குறிப்பாக கச்சேரி, பிரதேச செயலகங்களில் இந்த நிலை உள்ளது. நான் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்ததன் விளைவாகத்தான் கிண்ணியா, மூதூரில் முஸ்லிம் பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல தம்பலகமம், குச்சவெளி, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகங்களில் முக்கிய பதவிகளுக்கு முஸ்லிம் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. கச்சேரியில் ஏதாவது முக்கிய பதவிக்கு முஸ்லிம் அதிகாரி நியமிக்கப்பட வேண்டியுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே திருகோணமலை அரசாங்க அதிபரின் கவனத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். எனவே. இந்த விடயம் தொடர்பாக விரைவில் தீர்வு காணக் கூடியதாக இருக்கும்.

அஹமட் இர்ஸாட்:-

இப்பகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினை இன்னும் இருப்பதாக கூறப்படுகின்றே. இதனை எப்படி கையாளப் போகின்றீர்கள்?

இம்றான் மரூஃப்:-

உண்மைதான்.  உப்பாறு, மஜீத்நகர், நாவலடி, இக்பால்நகர், கரிமலையூற்று. கன்னியா, குச்சவெளி போன்ற பகுதிகளில் இன்னும் மீள்குடியேற வேண்டிய முஸ்லிம் மக்கள் மக்கள் இருக்கிறார்கள். இதேபோல மூதூர் கிழக்கு பகுதியில் மீள்குடியேற வேண்டிய தமிழ் மக்களும் இருக்கிறார்கள். இவை தொடர்பாக நான் கிழக்கு மாகாணசபையில் உரையாற்றியுள்ளேன். தற்போதைய மீள்குடியேற்ற அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன்.

எமது அரசின் கொள்கைகளில் ஒன்று சகல மக்களையும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் மீள்குடியேற்றுவதாகும். எனவே, இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதன் மூலம் இப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுவிடும்.

அஹமட் இர்ஸாட்:-

திருகோணமலை மாவட்டத்திலே தற்பொழுது முக்கியமான புள்ளிகள் பலர் ஐக்கியக் தேசியக் போட்டியிவதனால் கட்சியில்  முஸ்லிம்களின் அரசியலில்  ஒரு தளம்பல் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் வருக்கின்ற பொதுத் தேர்தலில் எத்தனை ஆசனங்களை முஸ்லிம்கள் வெல்லக்கூடிய வாய்ப்பிருக்கின்றது?

இம்றான் மரூஃப்:-

எனது தந்தை அஸ்ஸஹீத் மஃரூஃப் 1994ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேலையில் ஒட்டு மொத்த இலங்கையுமே சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளித்த நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் ஐக்கிய தேசீயக் கட்சியானது இரண்டு ஆசனங்களை வென்றெடுத்தது. இம்முறை ஐக்கிய தேசியக்கட்சியின் கை மேலோங்கியுள்ள நிலையில் ஏனைய கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே தேர்தல்லில் களமிறங்யுள்ளமையினல் இவ்வாறான தளம்பல் நிலை ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

இருந்தும் தற்போதைய களநிலவரத்தின் படி ஐக்கிய தேசியக் கட்சியானது இரண்டு ஆசனங்களை வெற்றெடுக்கும் என்பதில் அதீத நம்பிக்கை வைத்துள்ள எமக்கு அதிகப்படியான விருப்பு வாக்குகளுடன் இன்ஸா அல்லாஹ் நான் பாராளுமன்றம் செல்வேன் என்ற நம்பிகையுடன் இருக்கும் அதே நேரத்தில் எமது கட்சியானது மூன்று ஆசனங்களை வென்றெடுக்கும் என்பதிலும் ஆச்சரையப்படுவதற்கு இடமில்லை. 

அஹமட் இர்ஸாட்:-

முஸ்லிம்களின் காணி பிரச்சினை தொடர்பாக நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?

இம்றான் மரூஃப்:-

ஆம். செல்வநகர், கிண்ணியா, கரிமலையூற்று, சின்னம்பிள்ளைசேனை. புல்மோட்டை, குச்சவெளி போன்ற பகுதிகளில் இந்த பிரச்சினைகள் உள்ளன. நான் கடந்த காலங்களில் பல்வேறு மட்டங்களில் இது தொடர்பாக குரல் கொடுத்து வந்திருக்கின்றேன். எமது ஆட்சி அமைந்தவுடன் அரசாங்கத்தின் மேல்மட்ட கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்து பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் இதனை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்.

அஹமட் இர்ஸாட்:-

வெட்டிப்பார்த்தால் எனது இரத்தம் பச்சை எனும் அளவிற்கு ஐக்கியதேசிய கட்சியின் நம்பிக்கைக்குறிய உறுப்பினராக உள்ளீர்கள். அந்தவகையில் வருக்கின்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியானது அதிகாரத்தினை கைப்பற்றினால் முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற அனைத்து அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் ரணில் விக்ரமசிங்கவினால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா?

இம்றான் மரூஃப்:-

இவ்வாறான கேள்வி ஒன்றிற்கு கூற வேண்டிய முக்கிய விடயமானது சென்ற மஹிந்த ராஜபக்ஸ்ஸவின் அரசங்கத்திலே முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற இவ்வாறான அடிப்படைப் பிரச்சனைகளுக்கு அத்திவாரம் இடப்பட்டு அவைகள் பிரச்சனைகளாக தோற்றம்பெறத் தொடங்கின. ஆனால் இதற்கு முன்பிருந்த ஐக்கியதேசியக் கட்சியின் அரசாங்கத்திலும் இவ்வாறான பிரச்சனைகளுக்கு முஸ்லிம் கொடுத்து வந்தாலும் அதனை தட்டிக்கேற்கின்ற அளவிற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஜனநாயக ரீதியில் கருத்துச் சுதந்திரம் பரவலாக காணப்பட்டது. ஆகவே வருகின்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியானது வெற்றிபெறுமானால் நல்லாட்சியினை விருபுக்கின்ற ஜனாதிபதி மைத்திபாலவின் அதிகாரத்தின் கீழ் முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வினை ஐக்கியதேசியக் கட்சியானது பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கின்றது. 

அஹமட் இர்ஸாட்:- கொழும்பிலுள்ள கிருனிக்கா பிரேமசந்ர அதிகளவான இளைஞர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டதனைப் போன்று உங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளின் அதிகளவான வாக்குகளை வருக்கின்ற தேர்தலில் அளிக்க இருக்கின்றார்கள் எனப் பேசப்படுக்கின்றதே?

இம்றான் மரூஃப்:-

இந்த நாட்டினை பொறுத்த மட்டில் இளைஞர்களே இளைஞர்களை ஊக்குவிக்கும் தலைமைத்துவங்களாக காணப்படுகின்றார்கள். அது ஒரு புறமிருக்க அனேகமான இளைஞர் யுவதிகள் எங்களுடன் கைகோர்துள்ளனர். கடந்த மாகாண சபைத்தேர்தலிலும் எனக்கு அதிகளவான வாக்குகளை இளம் சமூதயத்தினர் அளித்திருந்தனர். இளைஞர் யுவதிகள் மாவட்டத்தில் எங்களை விரும்புவதை விடவும் அரசியல் அதிகாரத்தினை கொண்டு திறம்பட துடிப்புடன் மக்களின் பிரச்சனைகளை முன்னெடுக்கின்ற ஓர் வாலிபனின் கையில் அரசியல் தலைமைத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக  இம்முறையும் எனக்கு அதிகளவான இளைஞர் யுவதிகளின் வாக்குகள் கிடைகும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:-முன்னாள் சிறீலங்க முஸ்லிம் காங்கிரசின் பாரளுமன்ற உறுப்பினர் திடீர் தெளபீக்கு முஸ்லிம் கங்கிரஸ் இம்முறை தேர்தலில் களமிறங்கும் வாய்ப்பினை கொடுக்கத் தவறியமையினால் மூதூர் பிரதேசமக்கள் தற்பொழுது யாருக்கு வக்களிப்பது என்ற ஓர் தளம்பல் நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்? இவ்வாறான கட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக வர்ணிக்கப்படுகின்ற மூதூர் பிரதேச மக்களின் வாக்குகளுக்கு வருக்கின்ற பொதுத்தேர்தலில் என்ன நிலைமை ஏற்படும்?

இம்றான் மரூஃப்:-

இன்று மூதூர் மக்கள் எதிர்காலத்தை சிந்திக்ககூடிய மக்களாக மாற்றம் பெற்றுவருக்கின்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்.  சென்ற காலங்களிலே இங்குள்ள அரசியல்வாதிகள் எங்களுடைய பிரதேசங்களை ஏமாற்றத்திற்குள்ளாகி அதில் அரசியல் குளிர்காய்கின்றார்கள் என்பதனை எமது பிரதேச முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள தமிழர்களும் நன்குனர்ந்தவர்களாக இம்முறை தேர்தலுக்கு வாக்களிக்க இருக்கின்றார்கள் எனப்து முக்கிய விடயமாக ஒருபுறமிருந்தாலும் மூதூர்  மக்களுக்கு கடந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த சிறீலங்கா முஸ்லிம் காங்கைரசினால் முற்றிலும் ஏமாற்றப்பட்ட மக்களாக உள்ள மூதூர் மக்களின் பெரும்பாலான வாக்குகள் எமது கட்சிக்கு இம்முறை அளிக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்ற அதே நேரத்தில் எது நடந்தாலும் நானும் எனது கட்சியும் எதிர்காலத்தில் மூதூர்மக்களை கைவிடபோவதில்லை என்பதனை முக்கியமாக கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.

அஹமட் இர்ஸாட்:-

எனது அரசியல் கால எல்லைக்குள் எனது தந்தையின் கனவின் அடிப்படையில் முக்கிய இலட்சியமாக கருத்தில் கொண்டு எனது மக்களுக்கு செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கும் காரியம் என்ன?

இம்றான் மரூஃப்:-

இருபது வருடகாலமாக அரசியலினை நூறுவீத ஜனநாயகத்துடன் திருகோணமலையில் வாழ்கின்ற மூவின மக்களையும் ஒன்றுபடுத்தி அவர்களுக்கு சேவையாற்றியவர் எனது தந்தை என்பதில் எவரும் மாற்றுகருத்து தெரிவிக்கபோவதில்லை. அந்த வகையில் எனது தந்தை எவ்வாறான அரசியலினை இப்பிரதேசத்தில் மெற்கொண்டறோ அதிலிருந்து அனுவளவேனும் அவருடைய பாதையினை விட்டு விளகிச் செல்லாமல் எனது பணியினை மக்களுக்கு உணர்ச்சி மிக்கதாக செய்ய வேண்டும் என விரும்புக்கின்றேன். அதிலும் முக்கியமாக எமது மாவட்டத்தில் எல்லைக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழுக்கின்ற மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுப்பதோடு எமது மக்களின் கல்வியினை மேம்படுத்துவதே எனது முக்க்கிய குறிக்கோளாகும்.