மியான்மரில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளம் கடுமையாக பாதித்துள்ள நான்கு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களான ரகின், கன்னம், சாகனிங் மற்றும் மாக்வே ஆகியவை இயற்கை பேரழிவு பாதிக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த வெள்ள பெருக்கில் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கனமழையால் ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்கிறது. ஆற்று வெள்ளமும், மழை வெள்ளமும் சூழ்ந்துள்ளதால் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் வெள்ளமானது அந்த நாட்டின் தெற்கு பகுதியை நோக்கி பாய தொடங்கியுள்ளது. இதனால் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.