த.தே. கூட்டமைப்பினர் இனவாதத்தை தூண்டி, வாக்குகளை குவித்துக் கொள்ளும் சதித் திட்டத்தை தீட்டியுள்ளனர் !

images

தங்களது குறைகளை மறைத்துக்கொள்வதற்காக மீண்டுமொருமுறை இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அதன்மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்குகளைக் குவித்துக்கொள்ளும் சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியது. 

அத்துடன், கூட்டமைப்பினரின் சமஷ்டிக் கோரிக்கையை கடுமையாகச் சாடிய ஜே.வி.பி, ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த சமஷ்டிக் கோரிக்கையை முன்வைப்பதன் மூலம், சிங்கள கடும் போக்காளர்களை உசுப்பேற்றி தேவையில்லாத பதற்றத்தை அக்கட்சியினர் தோற்றுவிக்கின்றனர் என்றும் கூறியது.  கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, ‘வட மாகாண சபையினூடாக மக்களுக்கு எதையுமே கூட்டமைப்பினர், மக்களிடம் கூற எதுவும் இல்லாத நிலையில் சமஷ்டி பற்றி பேசுவதாகவும் நாட்டை பிரிக்கும் முயற்சியை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கும்’ என்றும் சுட்டிக்காட்டினார்