கடந்த மாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட சதித்திட்டத்தினை அம்பலப்படுத்துவேன்., உயர்பீட உறுப்பினர் ஹுசைன்

கவர் போட்டோ-3_Fotor அஹமட் இர்ஸாட்

 

கடந்த மாகாண சபைத் தேர்தலில் கல்குடாவில் திட்டமிட்டு சடத்தரணி றாசிக், ஜவாஹிர் சாலிஹ், இஸ்மாயில் ஹாஜியார் ஆகிய மூன்று வேட்பாளர்களை களமிறக்கி ஏறாவூரில் களமிறக்கிய ஹாபிஸ் நசீர் அஹமட்டினை வெற்றியடையச் செய்வதற்காக கட்சியின் தலைமையான ரவூப் ஹக்கீம் கல்குடாவில் உள்ள போராளிகளிn வீடுவீடாகச் சென்று ஹாபிஸ் நசீரின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த கபளீகர நாடகத்தோடு இன்னும் முஸ்லிம் காங்கிரsaanathu கல்குடாவிற்கு செய்த பல சதித்திட்டங்களை வருக்கின்ற தேர்தல் மேடைகளில் கல்குடா மக்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கும் பகிரங்கமாக அம்பலப்படுத்தவுள்ளதாக கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவரும் கட்சியின் அதியுயர்பீட உறுப்பினருமான எம்.பி.எஸ் ஹுசைன் கடந்த 31.07.2015 வெள்ளிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரசில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுக்கின்ற பிரதி அமைச்சர் அமீர் அலியினை ஆதரித்து கல்குடா பிறைந்துறைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் உத்தியோக பூர்வமாக இணைந்துகொண்டு பகிரங்கமாக தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய உயர் பீட உறுப்பினர் ஹுசைன் தான் முஸ்லிம் காங்கிரசானது ஆரம்பித்த காலத்திலிருந்து கட்சியின் விசுவாசியாகவும், பெரும்தலைவர் அஸ்ஸஹீத் அஸ்ரப்பினை மதிக்கும் கட்சியின் உறுப்பினராக இருந்து வந்த சமயத்திலே 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கல்குடாவின் பிரதி நிதித்துவம் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதற்காக அப்பொழுது முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்ட அமிர் அலியின் வெற்றிக்காக பெரும்பாடுபட்டு அவரினை பாராளுன்றத்தில் உட்காரச் செய்வதிலும் பெரும்பங்காற்றினேன். அதற்குப் பிற்பாடு 2010ம் ஆண்டு பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தலை கல்குடாவில் முன்னெடுபதற்காக முஸ்லிம் காங்கிரசில் இருந்து எவரும் முன்வராத நிலையில் எனது வீட்டில் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் தலைமையில் இடம்பெற்ற கலந்துறையாடலில் பசீர் சேகுதாவூத் என் கையினை பிடித்து உயர்த்தி இப்பொறுப்பினை ஹுசைனிடம் பாரம் கொடுப்பதோடு வருகின்ற பொதுத்தேர்தலிலும் ஹுசைனையே கல்குடாவில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்கவுள்ளதாக தெரிவித்தனை தொடர்ந்து வழமைபோல அக்கிருந்தவர்கள் அல்லாஹு அக்பர் என கோசமிட என்னிடம் மூன்று இலட்சம் ரூபாய்களை தந்து பொன்சேகாவின் ஜனாதிபதி தேர்தலினை முன்னெடுக்குமாறு நியமித்துச் சென்றனர்.

அதற்குப் பிற்பாடு மஹிந்த ராஜபக்ஸ்ஸவின் அதிகாரத்துடனான அரசாங்கத்தினை எதிர்த்து தன்னந்தனியாக போராளிகளை வைத்துக்கொண்டு எனது வீட்டினை காரியாலையமாக பயண்டுத்தி பொன்சேகாவின் ஜனதிபதி தேர்தலினை முனெடுத்தேன். பாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கட்சியின் தவிசாளர் என்னிடம் வந்து மட்டக்களப்பில் என்னை போட்டியிடுமாறு வேண்டியும் தான் வெற்றி பெற்றால் உங்களுக்கு தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்லும் பொறுப்பினை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தன்னை மீறி தலைவர் எந்த முடிவினையும் மட்டகளப்பில் எடுக்கமாட்டர் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் கல்குடாவிலிருந்து எனது நெருங்கிய நன்பனாக இருந்த அமீர் அலியினை எதிர்த்து தானும் லெப்பை ஹாஜியும் 2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடோம்.

கட்சியின் தலைமையானது ஓட்டமாவடியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கல்குடாவில் அமீர் அலி தோற்கடிக்கப்பட்டால் கல்குடாவிறுகு அதற்குச் சமமான வெகுமதி கட்சியினால் தரப்படும் என பகிரங்கமாக வாக்குறுதி அளித்துச் சென்றதனை கல்குடாவில் உள்ள போராளிகள் அனைவரும் அறிவார்கள். நான் அத்தேர்தலில் கட்சியின் உயர்பீடத்திடம் ஒரு ரூபாய்கூட பெற்றுக்கொள்லாமல் பலமில்லியன் ரூபாய்களை செலவளித்தும் கல்குடாவின் பிரதி நிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல பிரச்சனைகளை முகம்கொடுத்தவாறு செலவளித்தும் இறுதியில் பாராளுமன்றதுக்கு விருப்புவாக்கின் அடிப்படையில் பசீர் சேகுதவூத் தெரிவானார்.

அதனை தொடர்ந்து நானும் லெப்பை ஹாஜியும் பல தடவைகள் ரவூப் ஹக்கீமினை சந்திப்பதற்காக பல தடவைகள் கொழும்புக்குச் சென்று சந்தித்தும் எங்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மறுக்கப்பட்டது. அதனையும் பொறுத்துக்கொண்டோம் கடைசியில் இனி எங்களுக்கு தேசியப்பட்டியல் இவர்களால் கொடுக்கப்படமாட்டாது என்ற காரணத்தினால் மீண்டும் லெப்பை ஹாஜி அமீர் அலியுடன் இணைந்து கொண்டார். ஆனால் நான் கட்சியின் தலைமையின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக கட்சியுடன் ஒட்டிக்கொண்டிருந்தேன். இரண்டு வருடங்களுக்கு பிற்பாடு வந்த மாகாண சபைத் தேர்தலிலும் கட்சியின் தவிசாளர் இராஜினாம செய்து தனக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை தருவதாக கல்குடாவிற்கு வந்து மாகாண சபைத்தேர்தலை முன்னெடுப்பதற்காக கல்குடா மக்களிடம் வாக்குறுதி அளித்துச் சென்றார்.

ஆனால் நாட்கள் சென்றது கல்குடாவிற்கு கொடுக்கப்பட்ட அந்த வாக்குறுதியும் வழங்கப்பட்ட வில்லை. கல்குடா இருந்த பிரதி நிதித்துவத்தினையும் இழந்து தவிக்கின்றது என்ற காரணத்தினால் கல்குடாவில் உள்ள இளைஞர்களுக்கு எந்தவித அடிமட்ட வேலைவாய்ப்புக்கள் கூட கட்சியினால் வழங்கப்படவில்லை என்பதினாலும். கடைசியாக நான் கட்சியில் இருக்கின்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதி நிதிகளான ஹசன் அலி மற்றும் அஸ்லம் ஆகியோர்களின் பாராளுமன்ற நிதியிலிருந்து அரைப்பங்கையாவது கல்குடாவின் அபிவிருத்திக்கு ஒதுக்கித்தறுமாறு ரவூப் ஹக்கீமிடமும், கட்சியின் தவிசாளரிடமும் வேண்டி நின்றும் அவர்களால் கல்குடாவிற்கு கொடுக்கும் மனப்பாங்கு துளிகூட இருக்கவில்லை. கல்குடாவிற்கு கொடுக்கப்படும் என தலைமையினல் பகிரங்கமாக கொடுக்கப்பட்ட வாக்குறுதியும் காணல் நீரானது.

ஆகவே தற்பொழுது இருக்கின்ற முஸ்லிம் காங்கிரசின் தலைமையினால் கல்குடாவிற்கு எதனையும் செய்யமுடியாது என்ற காரணம் ஒருபுறமிருக்க தான் கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் விமர்சனங்கள் வருக்கின்ற பொழுது கட்சியின் தலைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக கல்குடாவில் தனியக நின்று கட்சியினை பாதுகாத்த என்னை துளிகூட கண்டுகொள்ளாத கட்சியில் இனியும் இருந்து பயணில்லை என்பதற்காகவே என்னுடைய நன்பனான அமீர் அலியின் அரசியல் பயணத்தில் கல்குடாவின் பிரதி நிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

11063815_861328540615568_596218662537128952_n_Fotor