இந்தியா – வங்காளதேசம் எல்லைப் பிரச்சனை: நாளை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை !

imrs

 

இந்தியா – வங்காள தேசம் இடையிலான மாற்றியமைக்கப்பட்ட புதிய எல்லை தொடர்பாக இருநாட்டின் எல்லையோர பாதுகாப்பு அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

இந்தியா-வங்காளதேசம் இடையேயான  வரலாற்று சிறப்பு மிக்க எல்லை பிரிக்கும் ஒப்பந்தம், கடந்த 31 ஆம் தேதி நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வங்காளதேசத்தில் இருந்த சில கிராமங்கள் இந்தியாவிடமும். இந்தியாவிடம்  இருந்த சில கிராமங்கள் வங்களாதேசத்திடமும் ஒப்படைக்கப்பட்டன. 

அதுவரையில் இரு நாட்டு குடியுரிமையும் இல்லாமல் “திரிசங்கு” நிலையில் தவித்த சுமார் 51 ஆயிரம் மக்களுக்கு இரு நாடுகளும் குடியுரிமை வழங்கின. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலும் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய எல்லை பகுதிகளை நிர்ணயிப்பது தொடர்பாக, டெல்லியில் உள்ள துணை ராணுவப் படை தலைமயகத்தில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

இந்த பேச்சுவார்த்தையில் வங்காளதேச எல்லை காவல்படையை சேர்ந்த 22 உயர் அதிகாரி்கள் கொணட குழு கலந்து கொள்ளும். இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக உயர் அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகள், இந்திய புள்ளிவிவரத்துறை அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை மற்றும் இதர உளவு அமைப்புகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று தெரிய வந்துள்ளது. 

இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்த பின்னர் வரும் 6 ஆம் தேதி வங்காளதேசத்திற்கு திரும்பும் முன்னர் இருதரப்பினருக்கும் இடையிலும் கூட்டு அறிவிப்பு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.