எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்பாட்டக்கரார்கள் மீது, வன்முறை மற்றும் சித்திரவதைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தமை தொடர்பில் அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு எகிபதில் இடம்பெற்ற இராணுவ புரட்சியின் மூலம் முர்சி, ஜனாதிபதி பதவியில் இருந்து விலக்கப்பட்டார். இதனையடுத்து, முஸ்லீம் சகோதரத்துவ இயக்கத்தின் செயற்பாடுகள், அதிகாரிகளால் தடை செய்யப்பட்டதுடன் முர்ஷிக்கு ஆதாவாக செயற்பட்ட 1,000ற்கும் அதிகமமானவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் கொலை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளில் மரணதண்டனையிலிருந்து முர்ஷி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் 14 பேர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முர்ஷிக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக முர்ஷி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.