தமிழ் சமூகத்துடன் இணைந்து போகின்ற எழுச்சி பெற்ற அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது – அமைச்சர் ஹக்கீம்

11796286_486822624829936_1554932513399348945_n_Fotor
 
அ.ரஹ்மான் 
தமிழ் சமூகத்துடன் இணைந்து போகின்ற எழுச்சி பெற்ற அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது. வேறுபாடுகளை நாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு மைத்திரி யுகத்தில் ரணில் விக்கிரமசிங்க எனும் சாதனையாளனின் வழி நடத்தலில் உலகம் எதிர்பார்த்திருக்கும் மாற்றத்தை நாம் அடைய போராடி வருகிறோம் என கண்டி மாவட்ட வேட்பாளரும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுத்தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அலிஷாஹிர் மெளலானவை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஏறாவூர் புன்னைக்குடா வீதி மெளலானா சதுக்கத்தில் நேற்று மாலை 4 மணிக்கு இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
ஐக்கிய தேசியக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட அரசாங்கம் பெரும்பான்மையோடு அமைகின்றபோது அத்தனை அபிவிருத்திகளும் உங்கள் காலடிகளை நாடி வரும்.
சிறுபான்மைச் சமூகங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட யுத்தம் முடிந்ததின் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உணர்வுகளோடு விளையாடி தங்களை வளர்த்துக் கொண்ட ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை வலிய வம்புக்கிழுக்கிற நிலைமையை நாம் மாற்றியிருக்கின்றோம்.
நாட்டுப் பற்று என்ற போர்வையில் போலித்தனமான முழு சர்வதேசத்தையும் பகைத்துக் கொள்கின்ற ஒரு வெளிநாட்டுக் கொள்கையைத்தான் மஹிந்த கடைப்பிடித்தார். வெளிநாட்டு முதலீடுகளை எல்லாம் தடுக்கின்ற ஒரு விதமான குருட்டு ராஜதந்திரத்தை கைக்கொண்ட ஆட்சியாளர்களை நாங்கள் விரட்டியடித்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 
இந்நிகழ்வு முஸ்லிம் கங்கிரசின் உயர்பீட உறுப்பினர் எம்.எச்.கபூர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும், நீர்வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் மற்றும் விஷேட அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் , பொதுவேட்பாளர் ஷிப்லி பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
11219405_486822528163279_416134675933697267_n_Fotor 11831654_486822751496590_7910203046500900933_n_Fotor