யுத்த வீரர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்ட சமாதானத்தையும் சுதந்திரத்தையும் காத்தவாறு தேசிய, மத நல்லிணக்கத்தையும் காப்பாற்றுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.
கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில், நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போது தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, ‘இலங்கையை சமாதானமான நாடாக முன்கொண்டு செல்வதற்கு, சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையீனத்தைக் களைந்து, அனைவரும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்’ எனக் கோரினார்.
தற்போதைய அரசாங்கமானது, அதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் காணப்படுவதையும் சுட்டிக்காட்டிய அவர், யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட படை வீரர்களின் குடும்பங்கள் தொடர்பான பொறுப்பை அரசாங்கம் தொடர்ந்து நிறைவேற்றும் என்றும் குறிப்பிட்டார்.