இந்தோனேஷிய இராணுவ விமான விபத்து: 100 பேர் பலி !

Security forces and rescue teams examine the wreckage of an Indonesian military C-130 Hercules transport plane after it crashed into a residential area in the North Sumatra city of Medan, Indonesia, June 30, 2015. At least 55 people were killed when a military transport plane crashed into a residential area shortly after take-off in northern Indonesia on Tuesday, but the toll looked set to rise after it emerged that more than 100 people had been on board. REUTERS/Roni Bintang

நான்கு இயந்திரங்களைக் கொண்ட அந்த சி-130 ரக ஹெர்குலஸ் விமானத்தில் குறைந்தது 113 பேர் பயணித்ததாக நம்பப்படுகிறது. இவர்கள் தவிர அந்த விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருக்க நேர்ந்தவர்களும் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

மேடன் நகரில் இருந்து வானுக்கு புறப்பட்டக்கொஞ்ச நேரத்திலேயே நொறுங்கி கீழே விழுந்த அந்த விமானம், அருகில் இருக்கும் குடியிருப்புக் கட்டிடங்களையும் கடைகளையும் சேதப்படுத்தியது.

null
விமானத்தின் சிதிலங்களை அப்புறப்படுத்தும் இராணுவத்தினர்

இந்த விமான விபத்துக்கு என்ன காரணம் என்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.

தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக, அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வரவேண்டும் என்று அந்த விமானி, விபத்து நடப்பதற்கு சற்று முன்னர் கேட்டுக்கொண்டதாக விமானப்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானத்தின் இடிபாடுகளில் தீப்பற்றி எறிவதையும், கரும்புகை மண்டலம் எழுவதையும் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி காண்பிக்கிறது.

150630091701_indonesia_force_cargo_plane__624x351_reuters

Security forces and rescue teams remove the bodies of victims from the wreckage of an Indonesian military C-130 Hercules transport plane after it crashed into a residential area in the North Sumatra city of Medan, Indonesia, June 30, 2015. REUTERS/Irsan Mulyadi/Antara Foto

Indonesian security forces and firefighters search through the wreckage of an Indonesian military C-130 Hercules transport plane after it crashed into a residential area in the North Sumatra city of Medan, Indonesia, June 30, 2015. REUTERS/Roni Bintang