ரஷ்யாவின் துணிச்சலான முடிவு -ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை ட்ரம்பிற்கு வழங்கத் தயார்

கொவிட்-19 க்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை (ஸ்புட்னிக் – 5) ரஷ்யாவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம், வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.
இது தொடர்பில் அதிகரப்பூர்வமான கோரிக்கை ரஷ்ய அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டால், நாங்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், அவரது மனைவி மெலினா ட்ரம்பிற்கும் உதவுவதற்கு தயாராகவிருப்பதாக கமலேயா நிறுவனத்தின் தலைவர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் ட்ரம்ப் நிர்வாகம் கட்டாயமாக ரஷ்ய தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலனியா ட்ரம்பும் கொவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்ததாகவும், வெள்ளை மாளிகைக்குள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் முன்னைய செய்திகள் தெரிவித்துள்ளன.இந் நிலையில் ஜனாதிபதியும் முதல் பெண்மணியும் கொரோனா தொற்றுக்குள்ளானாலும், ஆரோக்கியத்துடன் உள்ளதாக அவர்களின் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ட்ரம்ப் தனது கடமைகளை எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவேற்றுவார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.எனினும் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், புளோரிடா தேர்தல் பிரச்சார பயணத்தை இரத்து செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவத்தது. முதல் பெண்மணியும் தான் பங்கேற்கவிருந்த சில நிகழ்வுகளை ஒத்திவைப்பதாக டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது