கவிதாயினி மருதமுனை ஹரீஷாவுக்கு கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது

 

(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனையைச் சேரந்த எழுத்தாளர் எம்.சி.ஹரீஷா இலக்கியத் துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்காக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடாத்திவரும் இலக்கிய விழாவையொட்டி இவ்வருடம் இவர் இளங்கலைஞர் விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளளார்.இவருக்கான விருது 2019-09-23ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளது.

இவர் இளம் வயதிலேயே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு கவிதைகளை எழுதிவருகின்றார்.இவரது கவிதைகள் இலங்கையின் தேசியப்பத்திரிகைகளில் பிரசுரமாகி வருவதுடன்; வானொலி நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இவர்“உன் மொழியில் தழைக்கிறேன்”, சொட்டும் மிச்சம் வைக்காமல் ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

மருதமுனையின் இலக்கியப்பரப்பில் பெண் எழுத்தாளர்களில் இரண்டு நூல்களை வெளியிட்ட பெருமை இவரையே சாரும் இவரது கவிதைகள் இலக்கியவாதிகளாலும்,ஏனையோராலும் சிலாகித்துப் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சிறுவயதிலேயே கலை இலக்கியத்துறையில் ஆர்வம் கொண்டதன் காரணமாக 2000ஆம்; ஆண்டில் “உன்னை மட்டும்”என்ற கவிதையின் மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். தினகரன்,செந்தூரம்,நவமணி,தினக்கதிர்.இடி ஆகிய  பத்திரிகைகளிலும்,சஞ்சிகைகளிலும், வானொலி நிகழ்ச்சிகளிலும் கவிதைகளை எழுதியுள்ளார். 

 

இதுவரை இருநூற்;றுக்கு  மேற்பட்ட கவிதைகளையும்,பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.இவரது பல ஆக்கங்கள் சுனாமி அனர்த்தத்தில் அள்ளுன்டு போனமை  கவலைக்குரியதே மருதமுனையின் முதல் பெண் நிருபராக சுடர் ஒளி பத்திரிகை மற்றும் தினக்கதிர் பத்திரிகைகளில்  கடமையாற்றியுள்ளார்.
தற்பொழுது நூலகராகப் பணிபுரிந்து வரும் இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவியாவார்.இவர்; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியையும்,இலங்கை நூலக சங்கத்தின் நூலகர்(தரம்-1) டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.

1990-09-06ஆம் திகதி பிறந்த இவர் மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் ஹவ்லத் தம்பதியின் முத்த புதல்வியும், சிரேஷ்ட ஊடகவியலாளர் அப்துல் ஜப்பார் சமீமின் மனைவியுமாவார். 

 

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-