(வீடியோ)அக்கரைப்பற்று பல.நோ.கூ. சங்க பொதுச்சபை கூட்டத்தில் நடந்தது என்ன ?

எஸ்.ரி.ஜமால்டீன்

அக்கரைப்பற்று மத்திய பலநோக்குக் கூட்டுறவுச் சங்க விஷேட பொதுச்சபைக் கூட்டம் கடந்த சனிக்;கிழமை (13.04.2019) காலை சங்கத்தின் கேட்போர் கூடத்தில் தலைவர் எம்.ஐ.எம்.றபீக் தலைமையில் நடை பெற்றபோது தீர்மானம் எதுவுமின்றி அமளி துமளியில் கூட்டம் முடிவடைந்தது.

(Click video)

2A364236-3904-4AE1-B09B-415258A2F883

அக்கரைப்பற்று பிரதான வீதியில் கொமஸியல் வங்கிக்கு அருகில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான காணியில் தபாலக அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் தபாலக கட்டிடத்துக்கு அக்காணித்துண்டை அன்பளிப்பாக வழங்குவதா இல்லையா என்பது தொடர்பாக ஆராயும் ; நோக்கில் பிரேரணை ஒன்றை கூட்டுறவு சங்க பணிப்பாளர் சபையினர் விஷேட பொதுச்சபை கூட்டத்தில முன்வைத்த போது பொதுச்சபை உறுப்பினர்கள் பலர் காணியை அன்பளிப்பாக வழங்குவதற்கு பலத்த எதிர்ப்பை வெளியிட்டு அதற்காக வாடகை அறவிடபட வேண்டும் எனவும் உரைநிகழ்த்தினர்.

கடைசியாக பொதுச்சபை உறுப்பினர் ஊடகவியலாளர் மீரா இஸ்ஸடீன் கூட்டுறவ சங்க காணியை அன்பளிப்பாக வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கான நியாயங்களை முன்வைத்து உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவர் மீது பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தாண்ணீர் போத்தலினால் எறிந்தார் அதனையடுத்து கூட்டத்தில் கூச்சல் கூழப்பம் எற்பட்டு அமைதியின்மை எற்பட்டது.

அதனை தொடர்ந்து திர்மானம் எதுவுமின்றி கூட்டம் நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஜூனைடீன்,தலைமையக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.எம்.ஜலால்டீன்,கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜனார்த்தனா,அக்கரைப்பற்று கூட்டுறவு சங்க பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்,பொதுச்சபை உறுப்பினர்கள்,பொது முகாமையாளர் எம்.எஸ்.எம்.நஜீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

https://www.facebook.com/483381705154183/posts/1253104864848526?sfns=mo

 

Thanks TKN