• Home »
  • Slider »
  • தலைவர் அஷ்ரபுடன் இணைந்து மரத்திற்கு உரம் சேர்த்த மர்ஹும் அலி உதுமான்

தலைவர் அஷ்ரபுடன் இணைந்து மரத்திற்கு உரம் சேர்த்த மர்ஹும் அலி உதுமான்


ஓட்டமாவடி,  எம்.என்.எம்.யஸீர் அறபாத்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் அதனை வளர்ப்பதில் பல தியாகங்கள் செய்தவர்கள் பலருண்டு அதிலும் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்தவர்களின் வரிசையில் முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினருமான அலி உதுமான் அவர்களும் ஒருவர்.

பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவிய காலம். முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பம். விடிவை எதிர்பார்த்திருந்த மக்கள். அவர்களின் எதிர்பார்பைப் நிறைவேற்ற வந்த தலைவன் மர்ஹூம் மாமனிதர் அஷ்ரஃப் அவருக்கு பலம் சேர்த்தவர்களுள் இவரும் ஒருவர்.

அன்று முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்த வடகிழக்கு மாகாண சபைத்தேர்தலில் உயிரச்சுறுத்தல்

களுக்கு மத்தியில் போட்டியிட வேண்டிய சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது. அந்தத்தேர்தலில் சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்த அலி உதுமான் அவர்களும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத்தேர்தலில் அஷ்ரஃப் அவர்கள் வேட்பாளர்கள் யார் என்பதை பிறர் அறியாத வண்ணம் ஒரு யுக்தியைக் கையான்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

அக்கறைப்பற்றைச்சேர்ந்த ஆங்கில ஆசிரியரான அலி உதுமான், இணைத்த வடகிழக்கு மாகாண சபை உறுப்பினராக முஸ்லிம் காங்கிரஸினூடாகத் தெரிவு செய்யப்பட்டார். துணிச்சல் மிக்கவராகவும் அன்றைய ஆயுதப் பயங்கரவாதத்திற்கு சவால் விடுக்கக்கூடியவராகவும் திகழ்ந்தார்.

இதன் விளைவாக, 1989.08.01 ல் ஆயுதப்பயங்கரவாதிகளால் சுடப்பட்டு இந்த சமூகத்திற்காக உயிர் நீத்தார். 

அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக!

இவ்வாறு பல பேர் சமூக நோக்கத்திற்காக அச்சுறுத்தல்களு

க்கு மத்தியிலும் துணிந்து கட்சி வளர்க்கும் போராட்டத்தில் தலைமைக்கு பக்க பலமாக இருந்து உயிர்களை நீத்தார்கள். இவர்களின் இந்தத்தியாகங்கள் சர்வ சாதாரணமாக இன்று சிலரால் பார்க்கப்படலாம். அவர்களின் தியாகங்கள் பலராலும் கண்டு கொள்ளப்படாமலும் விடலாம்.

இவ்வாறான உயிர்த்தியாகங்களால் தான் கட்சி வளர்ந்து ஆலமாரமாய் இன்று வீற்று நிற்கிறது என்ற உண்மையை மறைக்க முடியாது. 

இன்று பலரும் இந்த கட்சியூடாக பல சுகபோகங்களை அனுபவிக்கிறார்கள். அவ்வாறு சுகபோகங்களை அனுபவிக்கின்ற பலரும், இக்கட்சியினால் பல்வேறு அனுகூலங்களைப் பெற்று கட்சியை விட்டு வெளியேறி, கட்சியை இல்லாதொழிக்கத் துடிக்கும் பலரும் இக்கட்சிக்காக பெரிதாக தியாகம் எதையும் செய்து விட்டதாகத் தெரியவில்லை.

மர்ஹூம் அலி உதுமான் போன்றவர்களின் தியாகங்களிலேயே தான் இன்று கட்சி வளர்ந்து பரந்துள்ளதை எவராலும் மறுக்க முடியாது. மாற்றமாக, ஒரு சிலர் அனுபவிப்பதும், அதில் ஏதும் குறைவு ஏற்பட்டு விட்டால் கட்சி மாறி, அல்லது புதிய காங்கிரஸ்களை உருவாக்கி முஸ்லிம் காங்கிரஸ் எனும் தாய்க்கட்சிக்கும் அதன் தலைமைக்கெதிராவும் செயற்படும் நிலையும் உருவாகியுள்ளது.

இவ்வாறானவர்கள் தங்களை நியாயப்படுத்த, சமூகத்தில் அனுதாபம் தேடிக்கொள்ள தலைமை மீது பழியைப் போட்டு தங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்திக் கொள்வதை நாம் கண்கூடே காண்கின்றோம்.

இவ்வாறவர்கள் மர்ஹூம் போன்றவர்களின் உயிர்த்தியாகங்களை ஒரு சம்பவமாகப் பார்க்காது, உணர்வு ரீதியாகப் பார்க்க வேண்டும். இன்று பலர் தாம் வாழ தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சொத்துகளைச் சேர்க்கிறார்கள். சமூகம் சார்ந்த அக்கறைகள் அவர்களிடம் இருப்பதுமில்லை.

ஆனால், அன்று சமூகத்திற்காக உயிர்களை இழந்தவர்களுக்கும் குடும்பங்கள், பிள்ளைகளும் இருந்தன. ஆனால், அவர்கள் சமூகத்திற்காகவும் அதன் உயர்வுக்காவுமே தங்களின் இன்னுயிரையும் நீத்தார்கள். இந்தக்கட்சியால் அவர்கள் அன்று எதனையும் அனுபவிக்கவில்லை. இருந்தும் சமூக நோக்கில் செயற்பட்டார்கள்.

ஆனால், இந்த கட்சியால் இன்று அனுபவிப்பவர்கள், கட்சிப்பொறுப்பு

கள் வழங்கப்பட்டவர்கள் சமூக நோக்கற்று ஏனோ தானோவென்று செயற்படுவதையும் பலர் உறக்கத்திலிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இதன் விளைவாகத்தான் கட்சி வளர்ச்சி மந்தகதியில் போய்க்கொண்டிருக
்கிறது. தலைவரும் விமர்சனத்திற்கு
ள்ளாகிறார் .

தலைவர் சகல விடயங்களையும் தானே செய்து கொண்டிருக்க வேண்டுமென்றால், சாத்தியப்படாதவொன்று. மாற்றமாக, ஆலோசனை வழங்கலாம். பொறுப்புகளுக்கு உரியவர்களை நியமிக்கலாம். அதை விட்டு, தலைவர் தான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும் என்ற நிலை இருக்குமானால், தலைமைக்கு நெருக்கடிகள், சுமைகளை அதிகரிக்கும்.

இவைகளை உணர்ந்து தலைவருடன் இணைந்து சகலரும் அர்ப்பணிப்புடன் இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறான அர்ப்பணிப்பு, தியாகம் எம்மிடம் ஏற்படுகின்ற போது தான், நம் முன்னோர்கள் செய்த தியாகம் அர்த்தப்படும். அது மாத்திரமின்றி, இன்றைய இளந்தலைமுறைக்கும் இவர்களின் தியாகங்களை எடுத்துக்கூறி, விளிப்பூட்ட வேண்டும். 

அதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்போது தான் கட்சி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுவதுடன், எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்தும் பாதுகாக்கப்படும்.

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-