ராஜபக்‌ஷவினருக்கு கடுமையான நெருக்கடியொன்றை ஏற்படுத்த; பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவி?

சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவிக்கு சரத் பொன்சேகா நியமிக்கப்படலாம் என்று ஐ.தே.க. வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

கடந்த மஹிந்த அரசின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையின் காரணமாகவே உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த அணியினர் அபார வெற்றிபெற காரணமாக அமைந்திருந்ததாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.அந்த வகையில் நீதி அமைச்சு மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சு என்பன அரசாங்கத் தரப்பினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன.

இந்நிலையில் தற்போதைக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியில் இருக்கும் சாகல ரத்நாயக்க, அப்பதவியை விட்டு சுயமாக விலகிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நலனுக்காக எந்தவொரு பதவியையும் தியாகம் செய்ய தான் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.இதனையடுத்து சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமித்து ராஜபக்‌ஷவினருக்கு கடுமையான நெருக்கடியொன்றை ஏற்படுத்த ஐ.தே.க. மூத்த அரசியல்வாதிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் சாகல ரத்நாயக்க சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவியை துறக்கும் பட்சத்தில் அந்த இடத்துக்கு சரத் பொன்சேகாவே நியமிக்கப்படலாம் என்று தெரிய வருகின்றது.