அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்ட போதிலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை

 மீரா அலி ராஜாய்

 நேற்று நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் அளிக்கப்பட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 24192 அதில் மு.கா.கூட்டு ஐ.தே.கட்சியினர் 11361 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களையும் , தேசிய காங்கிரஸ் 7453 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸினர் 4384 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் பொது ஜனப் பெர முன 779 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் தனதாக்கிக் கொண்டுள்ளது .

மொத்தத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .

இங்கு கூட்டாச்சிக்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .

அட்டாளைச்சேனை பிரதேச சபை கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்
கோட்டையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது . ஆனால் நேற்றைய தேர்தல் முடிவுகளின் பிரகாரம் முகாவுக்கு எதிராக 12625 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனையில் தேசிய காங்கிரஸிற்கு கடந்த தேர்தல்களை பார்க்கிலும் இம்முறை  அவர்களுடைய வாக்கு வங்கியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையின் பிரகாரம் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.நசீர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.