கண்டி மாவட்டத்தின் ஐ. தே. கட்சி கலகெதர அமைப்பாளராக உத்தியோகப்பூர்வமாக மாறவுள்ள ஹக்கீம்: மருதமுனையில் அமீர் அலி

 

முன்னாள் இராணுவத் தளபதியும், முன்னாள் ஜனதிபாதி வேட்பாளருமான  சரத் பொன்சேகா “ஜனநாயக கட்சி” என்ற (Democratic Party) பெயரில் கட்சி ஒன்றை அமைத்து அரசியல் செய்தபோது, இடைநடுவில் அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக மாறினாரோ, அதே பாணியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளதாக மாக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார்.

மருதமுனையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமீர் அலி 2020 ஆம் ஆண்டளவில் முஸ்லிம் காங்கிரஸை கலைத்து கண்டி மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி கலகெதர அமைப்பாளராக உத்தியோகப்பூர்வமாக மாறவுள்ள ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் நட்டாற்றில் விடப்போவதில் தனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை எனத் தெரிவித்தார்.

மர்ஹூம் அஷ்ரபின் காலத்தில் தேசியப் பட்டியலில் எம்.பியாகி, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக ஹக்கீம், அன்னாரின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை கேட்டுப் பெற்றதாக அமீர் அலி தனது உரையில் தெரிவித்தார்.